Header Ads



ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இனஅழிப்பு, நாடுகடந்த மத மோதல்களை பரவச்செய்யும் - உசைன்

மியான்மரில் ராகைன் நகரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக வசித்து வந்தனர்.  இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் அவர்கள் மீது இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றிய அறிக்கை ஒன்று கடந்த வாரம் வெளிவந்தது.  மியான்மர் அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.  ஆனால் செய்தியாளர்கள் மற்றும் ஐ.நா. புலனாய்வு அமைப்பினர் சம்பவம் நடந்த பகுதிக்கோ அல்லது இனஅழிப்பு பற்றி அகதிகளிடம் புலனாய்வு விசாரணை மேற்கொள்ளவோ தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், ஐ.நா. அமைப்பின் மனித உரிமைகள் தலைவர் ஜெயித் ராத் அல் உசைன் ஜகர்த்தா நகரில் பேசும்பொழுது, மியான்மர் நாடு தீவிர நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது என கூறினார்.  தொடர்ந்து அவர், ரோஹிங்யா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான இனஅழிப்பு நடவடிக்கையானது நாடு கடந்த மத அடிப்படையிலான மோதல்களை பரவ செய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வருடம் ஆகஸ்டில் இருந்து இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்காளதேச நாட்டிற்கு தப்பி சென்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.