Header Ads



ஜனாதிபதி + பிரதமர் குறித்து முறைப்பாடு - தேர்தல் ஆணைக்குழு களத்தில் குதிப்பு

தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஓரு சில மணித்தியாலங்கள் மீதமிருக்கையில் அரசாங்கத்திலுள்ள இரு பெரும் கட்சிகளின் தலைவர்களும், நாட்டின் இரு தலைவர்களுமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊடகங்கள் ஊடாக விசேட   அறிவிப்புக்களை விடுக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் கட்சிகள், கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் ஊடகத்துறை அமைப்புக்கள் என்பன தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளன.

இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு பின்வருமாறு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தேர்தல் வாக்கெடுப்பில் பாதிப்புச் செலுத்தும் விதமாக அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் அறிவிப்புக்களையோ, ஊடக அறிக்கைகளையோ விடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு தயவாய் கேட்டுக் கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை (10) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணிவரையிலான காலப் பகுதியில் இவ்வாறாக நடந்து கொள்ளுமாறும் அரசாங்கத்தின் தலைவர்களை ஆணைக்குழுவின் தலைவர் விசேட ஊடக அறிக்கையொன்றின் மூலம் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.