Header Ads



"வெள்ளிக்கிழமைக்கு பிறகு, நான் செய்யப்போவதை பாருங்கள்"


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று நடந்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமர் பதவிக்கு தெரிவு செய்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராகி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இது குறித்து தனக்கு அறிவித்துள்ளதாகவும் நாளைய தினம் வரை அவர்களுக்கு காலஅவகாசத்தை வழங்க தான் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி, பிரதமரிடம் கூறியுள்ளார்.

இதற்கு ஜனாதிபதியிடம் பதிலளித்த பிரதமர், தான் தற்போது பிரதமராக பதவி வகிப்பதால், புதிதாக பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க போவதில்லை எனக் கூறியுள்ளார்.

முடிந்தால், நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறும், அவ்வாறு முடியாது போனால், தான் செய்ய போவதை வெள்ளிக்கிழமைக்கு பின்னர் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதியிடம் , ரணில் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. பதவிப்பித்து தலைக்கடித்தால் தான் செய்வது சொல்வது தமக் கே தெரியாது.

    ReplyDelete
  2. இவன் கட்சியில் இருந்து போகவில்லையெனில் இழுத்து போக செய்யவேண்டும் Robert Mugabe க்கு செய்தது போல.

    ReplyDelete

Powered by Blogger.