Header Ads



வாக்கு இயந்திரமா பசில்..?

சமஸ்டித் தீர்வுக்கு எதிராகவும் நாட்டை வடக்கு-கிழக்கிற்குப் பிரித்துக் கொடுப்பதற்கு எதிராகவுமே மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 

மஹிந்தவின் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றமை குறித்து சிங்கள தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறினார்.பேட்டியின் முழு விபரம் கீழே த்தரப்பட்டுள்ளது.

கேள்வி:உங்கள் கட்சிக்கு கிடைத்த இந்த வெற்றிபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:பெரும் பொறுப்பை மக்கள் எம்மீது சுமத்தியுள்ளனர்.இது பெரும் சவால்.மக்கள் எதிர்பார்ப்பது என்னவென்று அறிந்து செயற்பட வேண்டியுள்ளது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று வருடங்களில் இந்த அரசு எதுவும் செய்யாததால் விரக்தியடைந்த மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து எம்மை வெற்றிபெறச் செய்துள்ளனர்.அந்த ஆணைக்கு ஏற்ப செயற்பட வேண்டியது எமது பொறுப்பாகும்.

கே:புதிய தேர்தல் சட்டத்தின்படி உறுப்பினர்களை பகிர்ந்தளிப்பதில் குளறுபடிகள் இருப்பதால் உங்கள் பொதுஜன முன்னணி சரியாக எத்தனை ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளது?

ப:உண்மையில் நாம் வெற்றிபெற்றிருப்பது 244 சபைகளிலாகும்.எமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட இடங்களில் நாம் சுயேச்சை குழுக்களுக்கு ஆதரவு வழங்கினோம்.அந்தக் குழுக்கள் வெற்றிபெற்றுள்ளன.அவற்றையும் சேர்த்தே 244 சபைகள் எம் வசம் வந்துள்ளன.இன்னும் பல சபைகளில் நாங்கள் வேறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்போது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

கே:இந்த வெற்றிக்குக் காரணம் மஹிந்தவா அல்லது வேட்பாளர்களா?

ப;இந்த மூன்று வருட ஆட்சியில் மேற்கொண்ட மக்கள்விரோத செயற்பாட்டை நிராகரிக்கும்வகையில் நாம்  கட்சிகள், சிவில் அமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்துக்கொண்டு பாரிய பிரசார வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம்.இதில் மஹிந்தவினதும் வேட்பாளர்களினதும் பங்களிப்பு உண்டு .எல்லாம் ஒன்றுசேர்ந்தே  வெற்றியைக் கொண்டு வந்தது.

கே:எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு இப்படியொரு வெற்றியைப் பெற்றுள்ளீர்கள்.இதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

ப: இந்த அரசின் பொருளாதார,அரசியல் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட கொள்கைகள் அனைத்தையும் மக்கள் முற்றாக நிராகரித்தமை முதல் காரணமாகும்.மூன்று வருடங்களுக்கு முன் இந்த ஆட்சியாளர்கள் கூறியவை அனைத்தும் பொய்யென்பதை மக்கள் உணந்துகொண்டமை இரண்டாவது காரணமாகும். அவர்கள் அன்று கூறியதையும் இன்று செய்ததையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.ஒன்றுக்கொன்று முரண்பட்டது.மஹிந்தவை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது மஹிந்தான் சிறந்த தலைவர் என்று மக்களுக்குப் பட்டது.இவைதான் பிரதான காரணங்கள்.

கே: இந்தத் தேர்தலின் வாக்கு இயந்திரம் நீங்களா?நீங்கள் வகுத்த திட்டத்தின் அடிப்படையிலா வெற்றி கிட்டியது?

ப:உண்மையில் மக்கள்தான் இந்த வெற்றிக்குக் காரணம்.

கே:ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை நீங்கள் பொறுப்பை பாரமெடுத்தீர்கள்.அதேபோல் இந்தத் தேர்தலின் வெற்றிக்கான பொறுப்பை பாரமெடுப்பீர்களா?

ப:இல்லை.அப்படி பாரமெடுத்தால்  அது பிழை.இந்த வெற்றிக்காக பலர் உழைத்தனர்.பல காட்சிகள்,அமைப்புகள்  உள்ளிட்ட பலரும் இதன் வெற்றிக்கு உழைத்தனர்.2015 ஜனவரி 8 ஆம் திகதியில் இருந்து அவர்கள் கடும் பாடுபட்டனர்.அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே இந்த வெற்றியைக் கொண்டு வந்தனர்.

கே: நீங்கள் வெற்றி பெற்றபோதிலும் ஜனாதிபதித் தேர்தலில் அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணை அப்படியே உள்ளது என்றும் அப்போதிருந்த 52 வீத வாக்கு 54 ஆக அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளாரே?

ப:  இது வெறும் தர்க்கம் மாத்திரமே.நாம் வெற்றிபெற்ற மாவட்டங்களை எடுத்துக் பார்த்தால் உண்மை புரியும்.ஜனாதிபாதித் தேர்தலில் நாம் தோல்வியடைந்த மாவட்டங்கள் அனைத்தையும் இலக்கு வைத்து நாம் வெற்றிபெற்றுள்ளோம்.

எமக்கு பௌத்த மக்களின் வாக்குகள் மாத்திரம் கிடைக்கவில்லை.அனைத்து இன மக்களின்  வாக்குகளும் கிடைத்தன.புத்தளத்தில் நாம் வெற்றிபெற்றோம்.அங்கு அனைத்து இன மக்களின் வாக்குகளும் எமக்கு கிடைத்தன.

கே: ஆனால்,தேசிய தேர்தல் ஒன்றுக்குச் செல்லும்போது இந்த நிலைமை மாறும் என்று சொல்கிறார்களே?

ப: அந்தத் தேர்தலுக்கு ஏற்ப நாம் அப்போது வியூகம் வகுப்போம்.

கே :பொதுஜன முன்னணியில் பதவிகள் எதையும் பெற்றுக்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லையா?

ப:கட்சி அப்படியொரு தீர்மானத்தை மேற்கொண்டால் பதவிகளை பெற வேண்டி வரும்.ஆனால்,இப்படியே தொடர்ந்து இருப்பதற்குத்தான் நான் விரும்புகிறேன்.

கே:ஜனாதிபதி தேர்தலின் தோல்வி உங்களின் உங்களின் தலையில் வீழ்ந்ததாலா நீங்கள் பதவிகளை பெறுவதற்கு தயங்குகிறீர்கள்?

ப:இல்லை.அதன் பொறுப்பை யாரும் என்மீது சுமத்தவில்லை.நானே பாரமேற்றுக்கொண்டேன்.நான் சில பொறுப்புகளை பாரமேற்பதற்கு முன் ஆதரவாளர்களுக்கு என்மீது நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகவே நான் அந்தத் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

கே:உள்ளூராட்சி சபைகளில் உங்கள் கட்சி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்குமா?

ப:சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பண்டாரநாயக்கவின் கொள்கைகளை குழி தோண்டிப் புதைத்ததால் மாற்றுக் கட்சி ஒன்று நாட்டுக்குத் தேவைப்பட்டது.அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காகவே நாம் வேறு ஒரு கட்சியை உருவாக்கினோம்.எமது கட்சியில் குறைபாடு இருந்தால் மாற்றுக் கட்சி ஒன்று உருவாக வேண்டியது அவசியமாகும்.

இதனால் சுதந்திரக் கட்சியுடனான இணைவு என்பது சாத்தியமற்றதாகும்.ஆனால்,சுதந் திரக் கட்சியின் கொள்கையை உண்மையாக நேசிக்கின்றவர்கள் கிராம மட்ட்டத்தில் உள்ளனர்.அவ்வாறானவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு எதுவிதப் பிரச்சினையும் இல்லை.

ஆனால்,அது காட்சிகள் இரண்டும் இணைந்து செயற்படுதல் என்று அர்த்தப்படாது.தலைவர்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தாலும் கிராமங்களில் உள்ள உண்மையான சுதந்திரக் கட்சிக்காரர்களை நாம் மதிக்க வேண்டும்.ஆனால்,ஐக்கிய தேசிய கட்சியுடன் நாம் சேரமாட்டோம்.

கே:தேர்தலில் ஏன் நீங்கள் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவில்லை?

ப: மைத்திரி தரப்பும் மஹிந்த தரப்பும் இரண்டாக்கப் பிரிந்து தேர்தல் கேட்டால் ஐக்கிய தேசிய கட்சி வென்றுவிடும் என்று கூறினார்கள்.ஆனால்,அந்தக் கட்சியைத் தோற்கடிப்பதற்காக பொறுப்பை நாம் ஏற்றோம்.அதன்படி செய்துகாட்டினோம்.

சுதந்திரக் கட்சியுடன் நாம் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் நாம் வென்றிருக்கமாட்டோம்.சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்திருந்ததை மக்கள் விரும்பவில்லை.அப்படியான நிலையில் நாம் சுதந்திரக் கட்சியுடன் இணைந்திருந்தால் நிச்சயம் ஐக்கிய தேசிய கட்சியே வென்றிருக்கும்.ஒன்றும் ஒன்றும்  இரண்டு என்பது அரசியல் கணக்கில் இல்லை. 

சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டால் அதிருப்தியடைந்தவர்களுக்கு மாற்றுத் தளம் ஒன்றை வழங்குவதற்காகவே நாம் புதிய கட்சியை உருவாக்கினோம்.பண்டாரநாயக்க செய்ததும் இவ்வாறுதான்.1951 இல் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாற்றுகே கட்சியாக சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.1956யில்தான் அந்தக் கட்சி அதிகாரத்துக்கே வந்தது.

கே: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் எதிர்கட்சிக்கு வருவதற்குத் தீர்மானித்தால் என்ன நடக்கும்?

ப: அது அவர்களின் தீர்மானம்.ஆனால்,மக்கள் எமக்குத் தெளிவான தீர்மானமொன்றைத் தந்துள்ளனர்.அதன்படியே நாம் செயற்படுவோம்.எதிர்காலத்தில் எமது புதிய கட்சிதான் முன்னோக்கிச் செல்லப் போகின்றது.நாட்டை ஆளப்போகின்றது.

எதிர்கால நாட்டிற்கு ஏற்றவாறு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.பண்டாரநா யக்க உருவாக்கிய சுதந்திரக் கட்சியின் கொள்கையுடன் எமது கட்சியின் கொள்கை நெருங்குகிறது.சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எமது கட்சியின் கொள்கையையும் மஹிந்த ராஜபக்ஸவையும் விரும்புகின்றனர்.

கே: தேர்தலின் பின் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்றும் உங்கள் கட்சிக்காரர்கள் கூறினார்களே.அது நடக்குமா?


ப:அது மக்களின் நிலைப்பாடு.அந்த நிலைப்பாட்டை இந்த அரசுக்கு ஏற்காது.மே தினக் கூட்டத்தின்போது நாம் இந்த அரசுக்கு ஒரு செய்தியைக் கொடுத்தோம்.அதை அவர்கள் ஏற்று செயற்படவில்லை.மாறாக,அரசியல் பழிவாங்கலையே மேற்கொண்டனர்.ராஜபக்ஸ குடும்பத்தினர் அனைவரும் சிறை செல்வர் என்று கூறியது இந்த அரசு.மக்கள் இதை விரும்பவில்லை.

கே: தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து சிறைக்கு அனுப்பும் வேலை முன்னெடுக்கப்படுமா?

ப:சிறை அனுப்புதலை  மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்துவிட்டனர்.உண்மையான ஊழல்வாதிகளை இந்த தண்டிக்கவில்லை;சிறைக்கு அனுப்பவில்லை.அவ்வாறானவர்களை எடுத்து பதவிகளைக் கொடுத்தது.அரசியலில் அரசுக்கு சவாலாக இருப்பவர்களை மாத்திரம் தண்டிக்கின்றது. 

கே: தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பிரதமர் பதவியில் மாற்றம் வருமா?

ப: இது தொடர்பில் உத்தியோகப்பற்றற்ற முறையில் பல தகவல்கள் எமக்கு வருகின்றன.இந்த அரசால் முடியாது என்றொரு தீர்ப்பை மக்கள் வழங்கியுள்ளனர்.அதற்கு ஏற்ப அரசு செயற்பட வேண்டும்.இரு தலைவர்களையும்  மக்கள் நிராகரித்துள்ளனர்.ஜனாதிபதி அவரது சொந்த மாவட்டமான பொலன்நறுவையிலேயே தோல்வியடைந்துவிட்டார்.இதைவிட என்ன இருக்கு?

மக்கள் இந்த இரு தலைவர்களை மாத்திரமன்றி அரசின் கடந்த கால செயற்பாடுகளையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த இருக்கின்ற வேலைத் திட்டங்களையும் நிராகரித்துள்ளனர்.

கே: ஐக்கிய தேசிய கட்சி தனி அரசு ஒன்றை அமைத்து அதில் இணைந்துகொள்ளுமாறு உங்கள் தரப்புக்கு அழைப்புவிடுப்பட்டால்..?

ப:இதில் சம்பந்தப்படுவதில்லை என்று எமது முன்னணியில் உள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுத்துள்ளோம்.நாம் ஒப்பந்தக்காரர்கள் ஊடாக எமது கட்சியை வளர்க்க வேண்டிய தேவை இல்லை.வடக்கு-கிழக்கு மற்றும் நுவரெலியாவில் கட்சியை வளர்ப்பதற்கு நாமே களத்தில் இரங்கி நிற்போம்.

கே: நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான சட்டமூலம் கொண்டுவரப்பட்டால் அதை நீங்கள் ஆதரிப்பீர்களா?

ப: இது தொடர்பில் கூறுவதற்கு எனக்கு உரிமை இல்லை.இது நாம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படும்போது எமது காட்சிகள் கூடிப் பேசி உரிய முடிவை எடுப்போம்.

கே:சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் உங்கள் அணியுடன் சேர்வதற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனரா?

ப: நான் அறிந்த வகையில் இல்லை.

கே: அவர்கள் வர முடியுமா?

ப: அவர்களை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் அல்லவா.ஆனால்,உண்மையில்,மக்களா ல் நேசிக்கப்படுகின்ற-சுதந்திரக் கட்சியையும் மஹிந்தவையும் விரும்புகின்றவர்கள் சுதந்திரக் கட்சிக்குள் உள்ளனர்.அவர்களை நாம் அரவணைப்போம்.

கே:2020 தேர்தலில் இதேபோல் உங்களால் வெற்றிபெற முடியுமா?

ப: நிச்சயமாக.நாட்டை முன்னேற்ற வேண்டுமென்றால் அது மஹிந்தவால் மாத்திரமே முடியும் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.உணர்வு அடுத்து வரும் எல்லாத் தேர்தல்களிலும் இருக்கும்.ஆகவே,எமக்கு தொடர் வெற்றி கிடைக்கும்.நாட்டின் அதிகாரம் மீண்டும் எமது கைகளுக்கு வரும்.-என்றார்.

[தமிழில் நியாஸ் முஹம்மட்]

1 comment:

  1. Hahaha...dreamssssss
    Just if you are good in Addition, subtraction, division...just calculate all the votes and what is the amount people voted for SLPP..
    Against to SLPP is the majority and do not think your voted people only the whole sri lankans...
    All sri lankans are living in all parts of lanka....
    So most majority of the sri lankans are aginst SLPP....
    Therefore, kindly go and sleep in your own home...dont dream much

    ReplyDelete

Powered by Blogger.