Header Ads



டெங்குவுக்கு முஹம்மது ஹனீக் வபாத்


டெங்கு காய்ச்சல் காரணமாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30) இரவு உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

கற்பிட்டி சின்னக்குடியிருப்பைச் சேர்ந்த முஹம்மது ஹனீக் எனும் 9 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான இம் மாணவன் கற்பிட்டி அல்ஹிரா பாடசாலையில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (27) மாலை காய்ச்சல் காரணமாக இவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், மாணவனின் உடல் நிலை மோசமடைந்து காணப்பட்டமையினால் அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் எனத் தெரிவிக்கப் படுகிறது.

கடந்த சனிக்கிழமை (27) இரவு புத்தளம் தள வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக மாணவன் அனுமதிக்கப்பட்ட போது, டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு இருப்பதாக மாண வனை பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் ௯றியதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.

சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் மிகத் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் ஜனாஸா நேற்று புதன்கிழமை காலை கற்பிட்டி பஸார் பள்ளி ஜூம்ஆப் பள்ளி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. புத்தளத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 comment:

Powered by Blogger.