Header Ads



மகிந்த வென்றது எப்படி..? (பாராளுமன்றத்தில் அம்பலமான உண்மை)


நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்த விசேட ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று -19-  இடம்பெற்றது.

உள்ளாட்சி தேர்தல்களின் நிறைவில் தமிழீழம் உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டமை தொடர்பில், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கண்டனம் வெளியிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கோ, சிறிலங்கா சுதந்திர கட்சிக்கோ மக்கள் வாக்களித்தால், தமிழீழம் உருவாக்கப்படும் என்றும், அதனால் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்குமாறும் மகிந்த பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

சிங்கள மக்கள் மத்தியில் ஒவ்வொரு கிராமங்களிலும், பௌத்த ஆலயங்களிலும் இவ்வாறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

இதனால் அச்சமடைந்த சிங்கள மக்கள் அரசாங்க கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பான தாங்கள், நாட்டை பிரிக்காமல், பிரிக்க முடியாத வாறு, ஒரே நாட்டுக்குள்ளேயே தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறோம் என்று இரா.சம்பந்தன் விவாதத்தின் போது கூறினார்.

2 comments:

  1. democracy means government for the people,by the people by the people, similarly ‍ෆොහොට්ටු රජය කියන්නේ බොරු කාරයෝ සදහා බොරු කාරයන් කිහිප දෙනක් විසින් බොරු ප්‍රතිපත්ති ඉටුකිරීම සදහා පාලනය කිරීම

    ReplyDelete
  2. ஸ்ரீ லங்கா
    ஒரே  நாடு :

    மூவினங்கள்
    மும்மொழிகள்
    மும்மாநிலங்கள்

    ஆண்டியற்ற நாட்டில்
    அனைவரும் அரசர்கள்
     
    அடக்குவோர் அடக்கப்படுவர்
    அடிபட்டுப் பெற்ற பாடம் மறவீர்!

    ReplyDelete

Powered by Blogger.