Header Ads



ரணில் இழைத்த, பெரும் தவ­று - ரஞ்ஜன்

ஜனா­தி­ப­தியை நாமே நிய­மித்தோம். ஆகவே திருட்டுக் கும்­ப­லுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஒன்று சேர விட­மாட்டோம். அதற்­காக உயி­ரையும் தியாகம் செய்து போரா­டுவோம் என பிரதி யமைச்சர் ரஞ்ஜன் ராம­நா­யக்க தெரி­வித்தார்.

அத்­துடன் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன மற்றும் சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரின் எதிர்ப்பை மீறி மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக அர்­ஜூன மகேந்­தி­ர­னையும் நிதி அமைச்­ச­ராக ரவி கரு­ணா­நா­யக்­க­வையும் நிய­மித்­தமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இழைத்த பெரும் தவ­றாகும் .

எனினும் பிர­தமர் தெரிவு செய்த அதி­கா­ரி­களின் தவ­றுக்கு அவர் பழி­யல்ல என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்ட கோட்­டையில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற விசேட கூட்­டத்தின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.அவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாம் சரிந்து போக­வில்லை. ஏனெனில் 2015 ஆம் ஆண்டு எமக்கு ஆத­ரவு வழங்­கி­ய­வர்­களின் வாக்­கு­களை ஒன்­றி­ணைத்து பார்த்தால் மஹிந்த ராஜ­பக்ஷவை விடவும் நாமே முன்­னி­லையில் உள்ளோம். எனினும் மஹிந்த ராஜ­பக்க்ஷ குறு­கிய காலத்தில் முன்­னேற்றம் கண்­டுள்ளார்.

வட்­டார பங்­கீட்டின் கார­ண­மாக ஏற்­பட்ட முரண்­பா­டு­களே பிரிந்து போட்­டி­யிட கார­ண­மாகும்.

ஜனா­தி­ப­தியை நாமே நிய­மித்தோம். ஆகவே திருட்டு கும்­ப­லுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஒன்று சேர விட­மாட்டோம். அதற்­காக உயிர்த் தியாகம் செய்து போரா­டுவோம். கொலை, கொள்­ளைக்­கா­ரர்கள் இருப்­ப­த­னா­லேயே மோடி போன்று ஆடை அணிந்து வாசம் பூசிக்­கொண்டு எம்­முடன் இணைந்து மேடை ஏறினார். இந்­நி­லையில் அவர் மீண்டும் அந்த கும்­ப­லுடன் இணை­வாரா?. அது ஒரு­போதும் நடக்­காது.

கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆட்­சியை அமைக்க வேண்டும் என சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆலோ­ச­னையை கேட்பார் என்று நான் நம்­ப­மாட்டேன். கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைய மாட்டார். அவரை தோற்கடித்ததும் அவர்களேயாகும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வர்­கள், அமைச்­சர்கள் ஆகி­யோரின் செயற்­பா­டு­களில் குறை­பா­டுகள் இருக்­கலாம். எனினும் அதனை நாம் சரி செய்வோம் என்றார்.

(எம்.எம்.மின்ஹாஜ்)

No comments

Powered by Blogger.