Header Ads



"எம்மால் ஒன்றும் செய்ய முடியாது” - மகிந்த

வடக்கு, கிழக்கில் உள்ள குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் உள்ள குறைபாடுகளினால், குறைந்தது 10 உள்ளூராட்சி சபைகளில், பெண்களுக்கான 25 வீத இடங்களை ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டத்தின்படி, உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு 25 வீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த 10 உள்ளூராட்சி சபைகளிலும், பெண் வேட்பாளர்களை நியமிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

வட்டார முறையில் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் ஆண் வேட்பாளர்கள் மாத்திரம் வெற்றி பெற்றிருந்தால், அந்தக் கட்சிக்குக் கிடைத்த விகிதாசார  அடிப்படையிலான ஆசனங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.

எனினும், 3 ஆசனங்களுக்குக் குறைவான ஆசனங்களைப் பெற்ற கட்சிகள், பெண்களை விகிதாசார முறையில் நியமிக்க வேண்டியதில்லை.

பெண்களுக்கு 25 வீத இடங்களை ஒதுக்க முடியாத நிலையில் உள்ள 10 உள்ளூராட்சி சபைகளுமே, வடக்கு கிழக்கில் தான் உள்ளன.

சாத்தியமானளவுக்கு பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த முயற்சிப்போம். இல்லா விட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் பாரிய முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதை அவதானிக்க
    முடிகிறது. குறிப்பிட்ட வீதத்துக்கு பெண்கள் பிரதிநிதித்துவத்தை பேணமுடிமை ,அநேகமாக ஒரு சபையில் பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை
    பெற்ற கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலமை,சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களுக்கு எவ்வித உத்தரவாதங்களும் கொடுக்கப்படாமை
    போன்ற விடயங்களை குறிப்பிட்டு
    கூறலாம்.
    இவற்றிக்கெல்லாம் காரணம் என்ன என ஆராய்ந்தால் தேர்தல் ஆணையம் பின்பற்றிய வாக்குகளின் கணிப்பீட்டு
    முறையில் உள்ள முரண்பாடே யாகும்.
    அறுபது வீத தெரிவு, வட்டார முறைமையிலும் நாற்பது வீத தெரிவு
    விகிதாசார முறையிலும் இருக்க வேண்டும் என சட்டம் வரையறித்துள்ளது. இங்கு தற்போது 100%வீதமும் விகிதாசார முறையிலே
    கணிக்கப்பட்டுள்ளது.எப்படி என்று பார்த்தால், வட்டாரமுறையிலே அறுபது
    வீதமானஅங்கத்தவர்களை வட்டாரவாக்களிப்பின் படி தெரிவு நடைபெற்று விட்டது எனக்கெண்டால்
    மிகுதியக உள்ள நாற்பது வீத உறுப்பினர்களையும் தெரிவுசெய்ய வேண்டும். அதற்கு ஒரு சபையில் எல்லாகட்சிகளும் பெற்ற மொத்தவாக்கின் கூட்டுத்தொகையை
    அச்சபையில் நாற்பது வீதம் பிரதிநதிததுவப்படுத்தும் பிரதிநிதிகளின்தொகையால் பிரித்தால் ஒரு பிரதிநிதிக்கான வாக்குத்தொகை வரும் இத்தொகையை ஒவ்வொரு கட்சியும்
    பெற்ற மொத்த வாக்கைகொண்டு வகுத்தால் ஒவ்வொரு கட்சியும் பெறவேண்டிய நாற்பது வீத விகிதார
    அங்கத்தவரின் எண்ணிக்கை வரும்.இதைக்கொண்டு. கணிப்பீடுசெய்வதன் மூலம்
    பெண்களின் விகிதாசாரம் பேணப்படும் ,அத்தோடு அறுவது வீதமான வட்டார தெரிவில் கூடுதலான
    ஆசனங்களை பெற்ற கட்சி நாற்பது வீதமான தெரிவில் பெற்ற ஆசனங்களையும் சேர்த்து பார்த்தால் ஏனயகட்சிகளின் உதவி இல்லாமல் தனித்தே ஆட்சி அமைக்க முடியும் மேலும் வட்டார தெரிவில் ஒருகட்சி சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பெற வில்லை
    என்றால் விகிதாசார பிரதிநிதித்துவத்தை கொண்டு அதை நிரப்ப முடியும். ஆனால் இங்கு எல்லா
    கட்சிகளும் பெற்றமொத்தவாக்கை
    அச்சபையில் இருக்க வேண்டிய மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கையால் பிரித்து ஒருஅங்கத்தவருக்கான வாக்கெண்ணிக்கையை கண்டு அதை
    ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கைக்
    கொண்டு வகுத்து பெறும் எண்ணிக்கை கட்சி பெற்ற மொத்த
    ஆசனங்களாக கருதப்படும் .இதில்
    ஏற்கனவே வட்டார முறையில் கட்சி
    பெற்றுக்கொண்ட ஆசனங்களை கழித்து மீதம்இருந்தால் அது விகிதாசார பட்டியலில் இருந்து நிரப்பப்பட்டுள்ளது.இது100% மும் விகிதாசார கணிப்பீடாகவே உள்ளது
    40%விகிதாசார கணிப்பு இல்லை.
    தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அவர்களே நீங்கள் மேற்கொண்ட கணிப்பீட்டின்படி பாரிய முரண்பாடுகள்
    ஏற்பட்டுள்ளன. இதனால் ஒரு சபையில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மேலதிகமாக உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய நிர்பந்தம், பெண்களின் விகிதாசாரத்தைபேணமுடியாமை,
    வட்டார தெரிவில் பெரும்பான்மை
    பெற்ற கட்சிகள்,குழுக்கள் சபையை
    அமைக்க முடடடியா திண்டாட்டம் மேலும் அக்கட்சிகளில் சிறுபான்மையினரின் பரதிநதி இல்லாமல் இருந்தால் அதை நியமிக்க முடியாமை போன்றவைகள்
    தொடர்ந்த வண்ணமே இருந்து சபைகளை அமைக்க முடியாத
    நிலமை உருவாகும். நான்குறிப்பிட்டது போல எல்லாகட்சிகளுக்கும் 40%விகிதாசார ஆசனங்கள் கொடுக்கப்படவேண்டும்.
    இங்கு சிலகட்சிகளுக்கு அவைமறுக்கப்பட்டுள்ளன.சிலகட்சிகளுங்கு அவர்கள் பெற்ற வாக்குகளுக்கம்கூட வழங்கப்பட்டுள்ளது.இது அநீதியானது இங்கு 60% வட்டார
    பிரதிநிதித்துவம் வேறு 40% விகிதாசார
    பிரதிநிதித்துவம் வேறு.இரண்டு்ம் வேறுவேறாக கணிக்கப்படவேண்டுமே
    தவிர ஒன்றாக கணிப்பிட முடியாது எனவே தேர்தல் முடிவுகளை இவற்றோடு ஒப்பிட்டு பாருங்கள் இதில் உள்ளநியாய அநியாயங்கள் நன்கு புலப்படும். எனவே தங்கள் கணிப்பீட்டு
    முறைமை பிழையானதாகும்.விகிதாசார பிரதிநிதித்துவ முறையை இங்கு இணைத்தது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறிதிப்படுத்தவே
    யாகும். ஆனால் உங்கள் கணிப்பீட்டின்படி அது சாத்தியமே இல்லை.






    ReplyDelete

Powered by Blogger.