Header Ads



முஸ்லிம்கள் சிரம் தாழ்த்தியதை பாராட்டுகிறேன் - நிலூக்க ஏக்கநாயக்கா


-JM- Hafeez-

முஸ்லிம்கள் தமது கலை கலாசாரங்களைப் பாதுகாத்த நிலையில் தேசத்தின் சுதந்திரம் மற்றும் இன ஒற்றுமைக்காக  சிரம் தாழ்த்தி கௌரவிப்பதை நான் பாராட்டுகிறேன் என மத்திய மாகாண ஆளுநர் நிலூக்க ஏக்கநாயக்கா தெரிவித்தார்.(4.2.2018) 

கண்டி மீராமக்காம் தர்ஹாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் 70 வது சுதந்திர தின வைபவத்தில் பிரதம அதிதயாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி நகர பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் வர்தகப் பிரமுகர்கள் உற்பட நலன் விரும்பிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வைபவத்தில் அவர் மேலும் கூறுகையில்-

சுதந்திர நிகழ்வுகளில் எனது மனதைத் தொட்ட அஒரு விடயம்தான் முஸ்லிம் சிறுவர்கள் தமது கராச்சார உடையிலே எமது  தேசத்தின் தேசிய கீதத்தை இசைத்து நாட்டிற்கான தமது கெரவத்தை வெளிப் படுத்தினர். 

அது மட்டுமல்ல இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் சுதந்திர வேட்கை பண்டைக் காலம் முதல் இன்று வரை தொடர்ந்து காணப்படுகிறது. பல்வேழிகளிலும் அவர்களது பங்களிப்பு நாட்டுக்குக் கிடைத்துள்ளது. எமது மத்திய மாகாணத்தில் சகல இன மத மக்களும் வாழ்நது வருகின்றனர். சமயம் என்ற வகையில் தனித்துவங்கள் காணப்பட்ட போதும் தேசியம் என்ற வகையில் ஒரு குடையின் கீழ் நிற்பது பாராட்டப்பட வேண்டும். ஏனெனில் மதங்கள் மாறு படலாம். அதற்காக தேசியத்துவத்தை நாம் மறக்க முடியாது. அந்த வகையில் இன்று இந்த இடத்தில் மேற்கொண்ட இவ்வைபவம் காலத்திற்கு மிகவும் பொருத்தமானது . இதனை ஏற்பாடுசெய்த மஸ்ஜித் சம்மேளனம் உற்பட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன் என்றார்.

இவ்வைபவத்தில் மவ்லவி சஹீதுர் றஹ்மான் நாட்டின் சமாதானத்திற்காகவும் இன ஒற்றுமைக்காகவும் துவா பிராத்தனை நடத்தினார். கண்டி மஸ்ஜித்  சம்மேளனத்தைச் சேர்ந்த கே.ஆர். ஏ. சித்தீக் வரவேற்புரையாற்றினார். முன்னாள் கண்டி நகர சபை அங்கத்தவர் இலாஹி ஆப்தீன் நள்றி உரையாற்றினார்.

இவ்வைபவத்தில் மத்திய மாகாண சபை அங்கத்தவர்களான எம்.டி.எம். முத்ததாலிப், ஜே.செய்னுல் ஆப்தீன், இதாயத் சத்தார், இந்திய உதவித் தூதுவர் தினேந்திர சிங் மத்திய மாகாண இராணுவ கட்டளைத் தளபதி  மேஜர் நிசங்க, கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பி. ஹிட்டி சேக்கர உற்பட பலர் கலந்துகொண்டனர். இவ்ரவபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்கா இலங்கையின் தேசிய கொடியை ஏற்றி வைக்க மத்ரசா மாணவர்கள் தேசிய கீதம் இசைத்தனர். 



1 comment:

Powered by Blogger.