Header Ads



இலங்கையருக்கு அமெரிக்காவில் 'இளம் ஆராய்ச்சியாளர்' விருது கிடைத்தது

மட்டக்களப்பு ஏறாவூர் நகரைச் சேர்ந்த மிருகவைத் தியரான சர்ஜுன் ஹாபிஸ் அமெரிக்காவின் 
"இளம் ஆராய்ச்சியாளர்" விருது வழங்கி கெளரவிக்கப் பட்டுள்ளார்.

ஏறாவூர், ஓடாவியார் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட மிருக வைத்தியர் சர்ஜுன், தனது மேற்ப டிப்பை கனடாவிலிருக்கும் University of Calgary' என்ற பல்கலைக்கழகத்தில் (Phd in | Virology) தொடர்கிறார்.

இப் பல்கலைக்கழகத்தில் உயர் கற்கை நெறியை மேற்கொள்ளும் இவர் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.

அதேவேளை கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான தொழில் நுட்ப மாநாட்டில் இவரால் மேற்கொள்ளப்பட்ட விஞ் ஞானபூர்வ துறைசார்ந்த  நிபுணத்துவ ஆராய்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன.

உலகின் பல்வேறு நாடு களிலிருந்தும் 394 புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இம் மாநாட்டில் சமர்ப் பிக்கப்பட்ட வேளையில், இவரது "இன்புளுவென்சா எச்1 என்1 வைரஸ்" எனும் பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் சம்பந்தமான ஆய்வு இம்மாநாட்டில் சமர் பிக்கப்பட்டது. இக் கண்டு பிடிப்பே அம்மாநாட்டில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

அமெரிக்கா, லண்டன், இத்தாலி, கனடா, ஜப்பான், ஜேர்மனி, கொரியா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஸ்பெயின், நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொண்ட புதிய கண்டு பிடிப்பாளர் வரிசையில் இவர் இளம் கண்டு பிடிப்பாளர் என்ற கெளரவப்பட்டத்தோடு பணப் பரிசில்களும் வழங்கி பாராட்டப்பட்டார்.

(ஏ.எச்.ஏ, ஹுஸைன்) 

4 comments:

Powered by Blogger.