Header Ads



அநீதியை மறக்கக் முடியாது, ராஜபக்சவினருடன் ஆட்சியமைக்க தயாரில்லை - துமிந்த

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தான் கொண்டுள்ள கடும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் துமிந்த திஸாநாயக்க கொண்டிருந்த எதிர்ப்பான நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஏனையோர் பற்றி எனக்கு எந்த புரிதலும் இல்லாத போதிலும் தனது தந்தைக்கு ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த அநீதியை மறக்கக் முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ராஜபக்சவினருடன் ஆட்சியமைத்து எனது கொள்கைகளை காட்டிக்கொடுக்க நான்ன் தயாரில்லை எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்த துமிந்த திஸாநாயக்க, கொள்கை அடிப்படையிலான தீர்மானத்திற்கு அமையவே தான் மகிந்த ராஜபக்சவை எதிர்த்ததாகவும் அதிகாரத்திற்காக கொள்கையை காட்டிக்கொடுக்க முடியாது எனவும் கூறியிருந்தார்.

ராஜபக்சவினர் தமது கொள்கைகளை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதால், ஆடை அணிந்துக்கொண்டு அவர்களுடன் ஆட்சியமைக்க முடியாது எனவும் துமிந்த திஸாநாயக்க கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.