Header Ads



புதன்கிழமை புதிய அமைச்சரவை, மைத்திரி மீது பாய்ந்தவர்களையும் சமாதானப்படுத்திய ரணில்


இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சமகால பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலை காணப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் காணப்பட்ட அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இளம் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை புரிந்து கொண்டு செயற்படுமாறு பிரதமர் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

சுசில் பிரேமஜயந்த உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் எதிர்க்கட்சிக்கு செல்வதாகவும், எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யப்படவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருந்த இளம் உறுப்பினர்களை சமாதானப்படுத்திய பிரதமர், அமைதி நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை அமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமகால நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஒத்துழைப்பை வழங்குமாறு சில வெளிநாட்டு தூதரகங்கள் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத் தெரியாமல் மறைத்து,
    தம்மைச் சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் நாசகார பண்புக்கு நயவஞ்சகம் என்று சொல்வார்கள்.

    ந‌யவஞ்சகர்களாக அடையாளம் காணப்பட்ட அரசியல் தலைமைகள் யாராக இருப்பினும் அவர்களது கையில் இறைவனால் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் இறைவனால் நிச்சயம் கழ‌ட்டப்படும்.

    இதுவே இறைவிசுவாசிகளின் -மதவாதிகளின் (பௌத்த, இஸ்லாம், இந்து) நம்பிக்கையாகும்.

    ReplyDelete
  2. (நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;; உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்; அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்; ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
    (அல்குர்ஆன் : 4:81)
    www.tamililquran.com

    ReplyDelete
  3. மக்களை ஒரு முறை இரு முறை ஏமாற்றலாம்.
    ஒவ்வொரு முறையும் ஏமாற்றலாம் என கனவு காண முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.