Header Ads



சுசில் பிரேமஜயந்தவின், கதி என்ன...?

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் நாளைய தினம் நடைபெறவுள்ளதுடன் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்க போவதில்லை என கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமைய அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.

சுசில் பிரேமஜயந்த நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பில் கலந்து கொள்ளாது வெளிநாடு செல்ல உள்ளதாக தெரியவருகிறது.

எனினும் முன்கூட்டியே திட்டமிட்ட வெளிநாட்டு பயணம் காரணமாகவே சுசில் பிரேமஜயந்த நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பில் கலந்து கொள்ள முடியவில்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை அமைச்சரவை மாற்றம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அமைச்சர் பதவியை ஏற்பதில்லை என்ற தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. like these brokers shouldnt be in the government..
    Double game player...then how they their work....for the people?
    Their job is only sending message here and there...
    So, you must avoid to give powers like these former idiots...
    Susil, Nishantha, thondamans, Dhayasiri, Cricket all rounder-Sumathipala, Susantha, Hisbullah, Ravi karunanayake, Nimal sripala, Jocker Dilan perera, SB Disanayake, John senevirathne...Anura priyadharshana.....Those all double gamer...so be alert

    ReplyDelete

Powered by Blogger.