Header Ads



கோட்டாவை சிறையிலடைத்து, மகிந்தாவை தடை செய்தால்..??

-தயான் ஜயதிலக-

ஹென்றி கீசிங்கர் மற்றும் ஒலிவர் ஸ்டோன ஆகியோரிடையே பொதுவான ஒற்றுமை சிறிதளவே உள்ளது, ஆனால் கீழ்கண்ட சொற்றொடரை உருவாக்கியதுக்காக இருவரும் பாராட்டப்படுகிறார்கள், ”நீங்கள் சித்தப்பிரமை உள்ளவராக இருக்கிறீர்கள் என்பதனால் அவர்கள் உங்களை அடைய முடியாது என்று அர்த்தம் இல்லை” அதன் மாறுபாடு பின்வருமாறு  உள்ளது “நீங்கள் சித்தப்பிரமை உள்ளவராக இருந்தால் நீங்கள் உண்மையான எதிரியை கொண்டிருக்க மாட்டீர்கள்”. இதே ஒற்றுமைதான் அதிகப்பிரசங்கித்தனமாக உளறுபவர்களுக்கும் உள்ளது. ஒருவர் வெறுமே அதிகப்பிரசங்கித்தனமாக உளறுபவராக இருப்பதால், அவர்கள் உண்மையை சொல்ல முடியாது என்றோ உண்மையை பேசமாட்டார்கள் என்றோ அர்த்தம் இல்லை. அமைச்சர் ராஜித சேனரத்ன யகபாலன அமைச்சரவையில் உள்ள ஒரு மிகப்பெரிய அதிகப்பிரசங்கியாக இருப்பதற்கான சாத்தியம் அவரிடம் உள்ளது, அவருக்கு சற்று இடைவெளிவிட்டு சரத் பொன்சேகா, சம்பிக ரணவக மற்றும் மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு எனறில்லாமல் அவரைப் பின்தொடருகிறார்கள். மற்றும் ராஜித சேனரத்ன சொன்னதாக த ஐலன்ட் பத்திரிகை அதன் பெப்ரவரி 1ந் திகதிய பதிப்பில் முதற்பக்கத்தில் வெளியிட்டிருப்பது என்னவென்றால், பெப்ரவரி 10ம் திகதிக்குப் பின்பு கோட்டபாயா ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவார் என்று, அவரது அளவுக்கு மீறிப்பேசும் குணாதிசயம் காரணமாக அதை முற்றாக நான் நிராகரிக்க மாட்டேன்.அவர் மாத்தறையில் ஒரு பொதுக்கூட்டத்தில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. ராஜித உண்மையைத்தான் பேசுகிறார் என நான் நம்புகிறேன்.

இப்போது முதலாவதாக இது அரசியல்வாதிகளுக்கு மற்றும் மிகவும் முக்கியமாக வாக்காளர்களுக்கு விஷயத்தை எளிதாக்குகிறது. பெப்ரவரி 10 ந்திகதியோ அல்லது அதற்குப் பின்போ, ஐதேக தோற்கடிக்கப்படாவிட்டாலோ அல்லது உத்தியோகபூர்வ ஸ்ரீலசுக உடன் கூட்டணியை அமைப்பதில் வெற்றி பெற்றாலோ என்ன நடக்கப்போகிறது என்பதை குடிமக்களாகிய நாங்கள் நன்கறிவோம். வவுனியாவில் பேசும்போது பிரதம மந்திரி திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்கள் என்பன ஒரு சிங்கப்பூர் நிறுவனத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படும் (நம்பிக்கையாக அர்ஜூன மகேந்திரன் வேலை செய்யும் ஒன்றாக இருக்காது) என்று சொன்னார். அவர் மேலும் தெரிவித்தது “தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருவதால் திருகோணமலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வவுனியா உட்பட வடக்கு மற்றும் கிழக்கு என்பனவற்றுக்கு நேரடியாக ஆதாயம் கிட்டும்” என்று.
இதற்கிடையில் ரி.என்.ஏயின் தேர்தல் விஞ்ஞ}பனம் 2002ல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா புலிகளுடன் மேற்கொண்ட கூட்டாட்சி ஊடாக உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒஸ்லோ உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் எம்ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையில் வெளிப்பட்டது, அதில் யாழ்ப்பாண பார்வையாளர்களிடம் உத்தேச புதிய அரசியலைமைப்புத் திட்டம் கூட்டாட்சி முறைக்கு அப்பால் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். இப்போது இதே ரி.என்.ஏ க்குத்தான் யகபாலன நிருவாகம் பாராளுமன்றதில் முக்கியமான எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்கி அதனை வலுவாக்கியுள்ளது, பாராளுமன்றத்தில் அதற்கு 16 அங்கத்தவர்கள் இருந்தபோதிலும் கூட்டு எதிர்க்கட்சிக்கு அதைப்போல மூன்றுமடங்கு அதிகமான அங்கத்தவர்கள் உண்டு.

எல்.ரீ.ரீ.ஈயினது இடைக்கால சுயாட்சி அதிகார முன்மொழிவை வரைவுசெய்த சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் சொர்ணராஜா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மைத்துனரும் மற்றும் இனவிவகாரங்களுக்கான அவரது முன்னாள் ஆலோசகரும் ஆவார், இவர் யாழ்ப்பாணத்தில் சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கருத்தரங்கில் ஆற்றிய உரையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழர் பிரச்சினைகளுக்கு “சர்வதேச சட்ட கட்டமைப்பு” ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மற்றும் வரும் மார்ச்மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் சபையில் (யுஎன்எச்ஆர்சி) இதை எழுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார், நல்ல முதலமைச்சர், மனித உரிமைகளுக்கான ஐநா ஆணையாளர் 2015ம் ஆண்டு தீர்மானம் பற்றிய ஸ்ரீலங்காவின் நடவடிக்கைகள் பற்றிய இடைக்கால அறிக்கையை இந்த அமர்வில் தாக்கல் செய்ய உள்ளதாக பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தினார்.

இதற்கிடையில் நிதியமைச்சா மங்கள சமரவீர, காணிச் சீர்திருத்தச் சட்டங்களை அகற்றுவதற்கு உதவி செய்வதும் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெருமளவு நிலத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்கும் வரவு செலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார் (மேலே குறிப்பிடப்படும் நிறுவனங்கள் எல்.ரீ.ரீ.ஈ யினது கறுப்புப் பணத்தை புலம்பெயர்ந்தவர்கள் வழியாக பாய்ச்சும் நிறுவனங்களா அல்லது இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது). ஐதேக வின் அஜித் பெரேரா பெப்ரவரி 10க்குப் பின்னர் புதிய அரசியலமைப்பு துரிதப்படுத்தப்படும் எனச் சொல்கிறார். பிரதமர் விக்கிரமசிங்க அவர்களே ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு (Pசுநுஊஐகுயுஊ)வின் பரிந்துரைகளுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ தனது குடியுரிமைகளை வெறும் ஏழு வருடங்களுக்கு மடடுமல்ல ஆனால் தனது வாழ்க்கை முழுவதும் இழக்கவேண்டி வரும் என்று சொல்லியுள்ளார். இது சம்பிக ரணவக்க, ராஜித சேனரத்ன மற்றும் ஸ்ரீலசுகவின் மகிந்தசமரசிங்கா ஆகியோர் மூலமாகவும் எதிரொலித்தது. இப்போது ராஜித சேனரத்ன கோட்டபாயா பெப்ரவரி 10க்குப் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று சொல்கிறார்.
ஒவ்வொரு நாளும் யாரும் குடிமக்களுக்கு இலவசமாக உதவிகள் செய்வதில்லை. இவை எங்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள். இந்த அறிக்கைகள் யாவும் எங்களுக்கு குறைந்த பட்சம் நாலு உதவிகளைச் செய்யும்.

முதலாவதாக நாங்கள் ஐதேகவுக்கு வாக்களித்தால் நாங்கள் எதற்காக வாக்களிக்கிறோம் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். இரண்டாவதாக இப்போது எங்களுக்குத் தெரியும் ஐதேக ஏன் மகிந்தவின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதுடன் கோட்டபாயாவை சிறையில் அடைக்க  விரும்புகிறது என்று. ரி.என்.ஏ யினை எதிர்க்கட்சியாக மாற்றும் அடுத்த தர்க்கரீதியான நடவடிக்கையாக ஐதேக, மகிந்த மற்றும் கோட்டபாயாவினை அகற்ற முயல்கிறது, மற்றும் ஏனென்றால் அதன்மூலம் துல்லியமாக தான் திட்டமிட்டிருக்கும் பெரிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அது விரும்புகிறது: திருகோணமலையை இந்தியர்களுக்கு கொடுத்து அதன்மூலம் வடக்கு மற்றும் கிழக்கினை வலுவூட்டுவது, காணிகளுக்கான அதிகாரத்தை மாகாணங்களுக்கு வழங்கும் ஒரு புதிய அரசியலமைப்பை வழங்குவது மற்றும் அது பேராசிரியர் சொர்ணராஜா அவர்களால் வரையப்பட்ட இடைக்கால சுயாட்சி அதிகாரத்தின் ஒரு மீள் கலவை ஆகும். தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் சார்பான நிறுவனங்கள் உட்பட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு  இந்த தீவில் உள்ள பரந்த நிலப்பரப்புகளை சொந்தமாக்க அனுமதிப்பது என்பனதான் ஐதேக போட்டுள்ள திட்டங்கள். ஸ்ரீலங்காவை துண்டாடி விற்கவேண்டுமானால் மகிந்த மற்றும் கோட்டபாயாவை அகற்றவேண்டும்.

மூன்றாவதாக எங்கள் நாட்டில் அப்படியான ஒரு எதிர்காலம் உருவாகுவதற்கு நாங்கள்; சம்மதிக்காவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். ரணில் தலைவராக நீடித்து இருக்கும்வரை ஐதேகவுக்கு எதிராக பெப்ரவரி 10ம் திகதி பாரிய எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும். நான்காவதாக நாங்கள் ஐதேகவுக்கு எதிராக வாக்களித்தால் நாங்கள் எதற்காக வாக்களிக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்.

மகிந்த மற்றும் கோட்டபாயா ஆகியோர் தேசிய எதிர்ப்பு சின்னமாக படிநிலை அமைப்பு மற்றும் காலக்கிரமமான வரிசையில் இருந்து வருகிறார்கள், மற்றும் ஸ்ரீலங்காவைப் பாரிய விற்பனை செய்யும் ஐதேகவின் முயற்சிக்கு சக்திவாய்ந்த தடையாகவும் உள்ளார்கள். இந்த செல்வாக்கற்ற அரசாங்கம், ஒரு அடி அல்லது இரண்டடி பின்வைப்பதற்கு மாறாக 1953 ஹர்த்தாலின் பின்னர் ஐதேக நெருக்கடியில் இருந்தபோது செய்த அதே தவறை மீண்டும் செய்வதை தேர்வு செய்வதுடன் கடிமையான உரம்வாய்ந்த வழிகளை எடுத்தால் (தற்போதைய பிரதமரின் தந்தையான எஸ்மன்ட் விக்கிரமசிங்கா உட்பட பலரின் ஆலோசனைப்படி சேர் ஜோண் கொத்தலாவலயை பிரதமராக நியமித்தது), இந்த அரசாங்கத்தின் செல்வாக்கற்ற நிலை பெப்ரவரி 10ம் திகதி தெளிவாக வெளிப்படும், பின்னர் அதே விளைவு தொடர்ந்து நிலவும் : சமூக  முனைவாக்கம் அதிவேகமாக அதிகரிக்கும் மற்றும் இறுதி தேர்தல் விளைவு மிகவும் தீவிரமான தேசியவாத திசையை நோக்கித் திரும்பும்.

தமிழ் புலிகளின் பயங்கரவாதத்தில் இருந்து தேசத்தைக் காப்பாற்றிய காவலர்களாக அவர்கள் பரவலாக அறியப்பட்டவர்கள் அவர்கள், மகிந்த அல்லது கோத்தபாயா அல்லது இருவருமே பாதிப்புக்கு உள்ளாகி சட்டபூர்வமான அடக்குமுறைக்கு உள்ளானால், அது 1955 - 56 ல் நடந்ததைப்போன்ற வெறும் பச்சாத்தாபமாக மட்டும் இருக்காது, ஐதேகவுக்கு எதிரான கோபமும் வெறுப்பும்  அதனை 1988ல் நடந்ததைப் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லும். இன்று  கோபமும் கொதிப்பும் கொண்ட மக்களின் பரவலான தேசியவாதத்தில் இருந்து காப்பாற்றவதற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளராக ரணசிங்க பிரேமதாஸ இல்லை. ஒரு முற்போக்கான மிதவாத ஜனாதிபதி வேட்பாளரை விட ஜனாதிபதி வேட்பாளருக்கான தெரிவு கோட்டபாயாவுக்கு ஆதரவாகத் திரும்பினால் அது சிறையில் இருந்து எழுச்சி பெறும். அரசியல் ரீதியாகவோ மற்றும் சிந்தாந்த ரீதியாகவோ தீவிரமடையும் எதுவும் சிங்கள தேசியவாதத்தை ஆயுதமயமாக்கும் மற்றும் முற்போக்கான மக்கள் மற்றும் தீவிரவாத தேசியவாதிகள் ஆகியோருக்கு இடையேயான சமநிலை வளர்ந்துவரும் எதிர்க்கட்சி முகாமை நோக்கிச் சரியும், அதுதான் கோட்டபாயா கைது செய்யப்படுவதால் ஏற்படுவதாக இருக்கும். ஏதாவது உறுதியாக இருந்தால் நகர்பு;புற ஐதேக உட்பட அனைத்து கட்சிகளிலும் உள்ள சிங்களவர்கள் நவம்பர் 2019 தேர்தலில் அவருக்குச் சாதகமாக பெரிய அளவில் திரும்புவார்கள், அது சட்டபூர்வமான தியாகியாவதற்கு உரிய ஒரு அளவாக இருக்கும். 2019 - 2020 ஐதேக ஆட்சியை உறுதியான ஒரு சிங்கள தேசியவாதமானதாக ஏதாவது மாற்றினால், அது தேசிய எதிர்ப்பின் சின்னமும் மற்றும் ஸ்ரீலங்காவை பாரிய விறபனை செய்வதை தடுக்கும் சக்திவாய்ந்த தடையாகவும் உள்ள மகிந்த மற்றும் கோட்டபாயாமீது மேற்கொள்ளப்பட்ட அவமதிப்பான தாக்குதலுக்கான தற்காப்பு பதிலடியாகவே இருக்கும்.

2019 - 2020ல் தோற்கடிக்கப்பட்ட ஐதேக, அரசியல் புரட்சி இயக்கமான “ஜகோபியன்” விளைவை எதிர்கொள்ளுமாயின் மற்றும் பசுமைக்கட்சிக்காரர்கள் ஏற்கனவே தங்கள் பச்சை அட்டைகளைப் பெற்றுவிட்டார்கள் என்கிற சமிக்ஞை கிடைத்தால், அது மகிந்த ராஜபக்ஸவின் வாக்குரிமையைப் பறிப்பதற்கும் மற்றும் கோட்டபாயாவை சிறையில் அடைப்பதற்குமான ஒரு நகர்வாகவே இருக்கும். 1975 ஏப்ரல் 30ந்திகதி வெளியேற்றத்தின்போது, தென் வியட்னாமியர்கள் சாய்வான நிலைக்குச் சென்றபோது அவர்கள், ரணிலின் ஐதேக வுக்குச் சமமான அமெரிக்க உலங்குவானூர்திகளை வீழ்த்தியதை மேற்கத்தைய தொலைக்காட்சிகளில் பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

No comments

Powered by Blogger.