Header Ads



கட்சித் தலைமையை நினைத்தவுடன், தட்டில் வைத்து வழங்க முடியாது - ரணில்

-எம்.ஏ.எம். நிலாம்-

உள்ளூராட்சித் தேர்தலில் நாட்டு மக்கள் காட்டிய சமிக்​ைஞயை நன்றாகப் புரிந்துகொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உறுதி பூண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியைப் பின்னடைவிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் தீர்மானித்திருப்பதாக குறிப்பிட்டார்.

அரசாங்கத்தைப்போன்றே கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை நிவர்த்தி செய்வதற்கு சற்றுக் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கட்சியை புனரமைக்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. 24 வருடங்களாக தலைமைப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதாக குற்றம் வேறு சுமத்தப்படுகிறது. நான் ஒரு போதும் சர்வாதிகாரியாக செயற்பட முயற்சிக்கவில்லை. எதிர்காலத்திலும் கூட அவ்வாறு நினைக்கப் போவதில்லை. கட்சிக்கு இளம் இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். வலிமையும், திறமையும் கொண்ட இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டியுள்ளது. அதனை நினைத்தவுடன் தட்டில் வைத்து வழங்க முடியாது அப்படிச் செய்ய முயன்றால் சவாலை எதிர்கொள்ள நேரிடலாம். சரியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆளுமை மிக்க இளைய தலைமுறையொன்றை உருவாக்கி அவர்களிடமே கட்சியை ஒப்படைக்க தீர்மானித்திருக்கின்றேன்.

எதிர்காலத்தில் நாட்டை ஆட்சி செய்யக்கூடிய திறமைமிக்க நல்ல தலைவர்களை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

2 comments:

Powered by Blogger.