Header Ads



பிரியந்த இனி, லண்டன் செல்லமாட்டார்


பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இவர் இலங்கை வரும் போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் அவர் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரியங்கர பெர்னான்டோவின் பாதுகாப்பு மற்றும் தூதரகத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2

இனி லண்டன் செல்லமாட்டார்

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பதவிகாலம் முடிந்து விட்டதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நாட்டின் இராணுவத் தளபதி என்ற வகையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின்  பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது கடமை.

இன்னொரு நாட்டின் சட்டத்தின் கீழ், தமது கடமைகளை அவர் நிறைவேற்றும் போது, அவரது பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை.

இந்த விடயங்கள் குகறித்துப் பேசவே அவரை அழைத்தேன். கொழும்பு திரும்பியதும் அவரைச் சந்தித்து நான் பேசுவேன்.

அவர் சிறிலங்காவுக்குத் திருப்பி அழைக்கப்படவில்லை. ஏனென்றால் அவரது பதவிக்காலம் முடிந்து விட்டது.

அவரது பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.