Header Ads



நாங்கள் நிச்சயமாக, ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை - சம்பந்தன்

நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை. அதேசமயம் நாங்கள் தமிழீழத்தையும் கோரவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த நாட்டுக்குள் இறையாண்மையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் இந்த நாட்டுக்குள் சமஅதிகாரத்துடன் வாழ்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.

களுவாஞ்சிக்குடியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

உள்ளூராட்சி தேர்தலை தொடர்ந்து ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கும், பெரும்பான்மையின மக்களுக்கு உண்மையை விளக்குவதற்கும் முயற்சிக்க வேண்டும்.

அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். இது ஒரு சாதாரணமான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அல்ல. இன்று நாட்டில் இருக்கின்ற சூழலின் அடிப்படையில் சர்வதேசம் சம்பந்தமாக இது ஒரு முக்கியமான தேர்தல் என நான் கருதுகின்றேன்.

நாட்டின் பெரும் தலைவர்கள் இந்த தேர்தலில் மிகவும் அற்பணிப்போடு செயற்பட்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதொரு தேர்தல் எனவும் இந்த நாட்டில் ஒற்றையாட்சி மலரப்போகின்றதா? அல்லது தமிழீழம் மலரப்போகின்றதா என்பதை தீர்மானிக்கின்ற தேர்தல் எனவும் கூறியிருக்கின்றார்.

அரசாங்கம் வழங்கப்போகும் தீர்வின் மூலம் தமிழீழம் மலரும் என்ற கருத்துப்பட அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். நாங்கள் நிச்சயமாக ஒற்றையாட்சியை ஏற்கப்போவதில்லை. அதேசமயம் தமிழீழத்தையும் கோரவில்லை.

ஒருமித்த நாட்டுக்குள் இறையாண்மையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் இந்த நாட்டுக்குள் சமஅதிகாரத்துடன் வாழ்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு.

அது அங்கீகரிக்கப்பட வேண்டும். இது சாதாரண உரிமையல்ல ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையால் உருவாக்கப்பட்ட உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கிமூன் அவர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து நாங்கள் சந்தித்தோம். இதன் போது “இங்கு நடைபெறுகின்ற ஆட்சி எமது இறையாண்மைக்கு அப்பாற்பட்ட ஆட்சி

இது எமது சம்மத்துடன், இணக்கப்பட்டுடன் சர்வதேசத்தின் அடிப்டையில் நாங்கள் ஏற்றுக்கொண்ட ஆட்சியல்ல. இதனை தொடர முடியாது. தற்போது அரசியல் தீர்வுக்கான வேலைகள் நடைபெறுகின்றன.

அது வெற்றி பெறவேண்டும். அதற்கு நாங்கள் போதிய ஒத்துழைப்பை வழங்குகின்றோம். ஆனால் அவர்களின் தவறின் காரணமாக இது நிறைவேற்றப்படவிட்டால், இந்த நிலைமையை தொடரமுடியாது.

எம்மீது புகுத்தப்பட்ட ஒரு ஆட்சியை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளவதற்கு அவசியமில்லை. அதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என சொல்லி வைப்பதில் தவறில்லை” என நான் அவரிடம் கூறினேன்.

இதுதான் நிலமை. அதன் அடிப்படையில்தான் தற்போது ஒரு புதிய அரசியல் சானத்தை உருவாக்குவதற்கான நடவடிக்ககைள் நடைபெற்று வருகின்றன. இந்த அரசியல் சாசனம் எமக்குத்தேவை. இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவருக்கும் தேவை.

தேர்தலின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து அரசியல்சாசனத்தை உருவாக்குவதற்கும், பெரும்பான்மையின மக்களுக்கு உண்மையை விளக்குவதற்கும் முயற்சிக்க வேண்டும்.

அவர்கள் அதனை நிறைவேற்ற வேண்டும். இது இந்த நாட்டிற்கு ஒரு அத்தியாவசியமான தேவை. நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் ஒரு அத்தியாவசியமான தேவை.

எமது மக்கள் 2015ஆம் ஆண்டு வாக்களித்து ஒரு மாற்றத்தினை ஏற்படுத்திய போது எமது மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

புதிய ஆட்சி ஏற்பட்டவுடன் ஒரு புதிய ஆட்சிமுறை உருவாகும், அந்த ஆட்சிமுறையின் கீழ் நாங்கள் சமத்துவமாக, சமாதனமாக, சுயமரியாதையுடன் சம பிரஜைகளாக வாழ்வோம் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.

அது நிறைவேற்றப்பட வேண்டும். அது நிறைவேற்றப்படாவிட்டால் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. அதுதான் உண்மை. நான் பலதரப்பட்ட இராஜதந்திரிகளை சந்தித்து வருகின்றேன். அவர்களிடம் இதனை விளக்கியும் வருகின்றேன்.

அவர்கள் எமக்கு சாதகமாக இருக்கின்ற வேளையில், நாங்கள் 1956ஆம் தொடக்கம் எமது கொள்கையில் இருந்து மாறவில்லை. மாறமாட்டடோம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் மாறவேண்டிய தேவையில்லை.

இந்த செய்தி சர்வதேசத்திற்கு போகவேண்டும். எனவே வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து எமக்கு திடமான வெற்றியை வழங்க வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. இந்த நாட்டில் ஓர் இனம் மற்றோர் இனத்தின் உரிமைகளை மதித்து, ஆரம்பபம் முதலே சமத்துவமாகவும், சகோதரத்துவமாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால்,  தீர்வு தெளிவானதாகவும் அனைத்து இனங்களுக்கும் நீதியானதாகவும் இருக்க வேண்டும்.

    பெயர்கள் எவ்வாறிருந்த போதிலும்,  அவ்விதமான  தீர்வு இவ்வாறிருந்தால் என்ன?

    மூன்று மாநிலங்கள்:

    1. லங்கா
    2. தமிழ் ஈழம்
    3. கிழக்கிஸ்தான்

    மும்மாநிலங்களிலும் நிர்வாக மொழிகள், மும்மொழிகளுமே:

    1. சிங்களம்
    2. தமிழ்
    3. ஆங்கிலம்

    மூவினங்களையும் மும்மொழிகளையும் கொண்ட ஒரே நாடு:

    එක්සත් ශ්‍රී ලංකා ජනපදය
    ஐக்கிய ஸ்ரீ லங்கா மாநிலங்கள்
    United States of Sri Lanka (USSL)

    நில ஆக்கிரமிப்பிலிருந்து சுதந்திரம் கொண்டாடப்போகும் நாம்,   ஏன் இன, மொழி ஆக்கிரமிப்பில் இருந்தும் சுதந்திரம் கொண்டாடக் கூடாது?

    ReplyDelete
  2. That means you are the other side of the tigers who never, ever reach to any settlement as whatever supposed to offer by the govt. tigers opposed to it in order to attempt in vain to reach their so called target with unjustifiable means which proofed total failure. If senior politician does not or unable to grasp the truth, that is the unfortunate circumstances of the Tamil community.

    ReplyDelete
  3. நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன ஏற்றுகொள்ளா விட்டால் என்ன. உங்களையெல்லாம் யார் கணக்கில் எடுப்பது? இந்த நாட்டின் சிறுபான்மை தமிழனுக்கு ஏற்றார்போல் ஆடினால் முஸ்லிம்களும் சிங்களவர்களும் எங்கு செல்வது?

    ReplyDelete
  4. @Mahibal Fazzy,
    You are 100% right and your statements make sense.

    ReplyDelete
  5. @professional Translation,
    Bro again and again we are insisting that don't encourage the illegal settlements, so why you ppl always against the settlements of Isreal in West bank and Gaza. Truly, more than driven out muslims have settled in north with their children, more invasion of muslim in north defeneatly cause the effect in the ethnic distribution of north. Not only us any human being never allow this incl palestians

    ReplyDelete
  6. @ Anusath Chandrabal

    Thank you. Please let this know Hon. Sampantham Ayya and ask to carry this resolution pack to The President to implement for the benefit of whole nation.

    ReplyDelete

Powered by Blogger.