Header Ads



டுபாயில் உள்ள இலங்கையர்கள் சாதனை - பொலிசார் பிரமிப்பு


ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மனிதவள மற்றும் எமிர் மயமாக்கல் அமைச்சர் நசீர் பின் தானி அல் ஹம்லிக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரளைக்கும் இடையில் வீட்டு வேலையாட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டப்புரிந்துணர்வு ஒப்பந்த விரிவாக்கம் பற்றிய கைச்சாத்து எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடுநிலையான வலுவான வேலை சுற்றுவட்டத்தை இரு நாடுகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது என அமைச்சர் நசீர் பின் தானி அல் ஹம்லி தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மனித வலுவை வழங்குவதில் இலங்கை  முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த வருடம் சமூக வலைத் தளங்களை பார்வையிட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அதிகம் என டுபாய் பொலிஸார் தமது புள்ளிவிபரத்தை வெளியிட்டனர்.

ஒளிவு மறைவின்றி சட்டத்திற்கு மதிப்பளித்து இலங்கை தொழிலாளர்கள் தெரிவு செய்யப்படுவது மட்டுமின்றி வேலைவாய்ப்பு முகவர்களின் செயற்பாட்டை ஒழுங்குபடுத்துவதும் இவ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஷம்லி மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.