Header Ads



தேர்தல் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து, இனவாதத்தை தூண்ட முயற்சித்தனர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புண்ணியத்திலேயே விமல் வீரவங்ச கடவுச்சீட்டு பிரச்சினையில் இருந்து தப்பித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று -19- நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகளை ஆசிர்வாதமாக ஏற்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் நிலைப்பாடு காணப்படுகிறது. 55 வீதமான மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு எதிராக உள்ளனர்.

தேர்தலில் மக்கள் ஒரு செய்தியை வழங்கியுள்ளனர். ஊழல்,மோசடிகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை நிறைவேற்றவில்லை என்பதால், மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விமல் வீரவங்ச பல்வேறு கதைகளை கூறினார். பிரதமரின் புண்ணியத்தில் கடவுச்சீட்டு பிரச்சினையில் இருந்து தப்பித்தார். இல்லையென்றால் அவர் சிறையில் இருந்திருப்பார்.

இதனால், நாம் மீண்டும் 2015 ஜனவரி 8 மக்கள் ஆணையை ஆரம்பிக்க வேண்டும். இந்த நாட்டில் இனவாதம் மற்றும் பாசிசவாதத்திற்கு எதிராக முகாம் ஒன்று உள்ளது.

தேர்தல் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இனவாதத்தை தூண்ட முடியுமா என்று முயற்சித்து பார்த்தனர். நாங்கள் அதனை தோற்கடித்தோம் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.