Header Ads



மகிந்த எப்படி வென்றார்..? விக்னேஸ்வரனின் கண்டுபிடிப்பு இது


மஹிந்த ராஜபக்ஸ மேற்குலகுடன் சேர முன்வந்தால் மைத்திரியும் ரணிலும் தூக்கி எறியப்படுவார்கள் என்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவ நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாகின்றது.

அதேவேளை தெற்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மீண்டும் இனவாதம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதையே தெளிவுபடுத்துகின்றது. அந்த வகையிலே இந்தத் தேர்தல் முடிவுகளை நீங்கள் எவ்வாறு கருதுகின்றீர்கள்? தமிழ் மக்களுக்காக நீங்கள் கூற விரும்புவது என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சிங்கள மக்களின் காவலனாக மஹிந்த அவர்கள்.

தேர்தலுக்கு முதல் நாள் கொழும்பு சென்ற வழியில் நான் பேசிய பல சிங்கள சாதாரண மக்கள், அதுவும் விவசாயத்துடன் தொடர்புடையவர்கள், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உரம் பற்றிப் பிரஸ்தாபித்தார்கள். மஹிந்த ரூ 350/= க்கு மானிய அடிப்படையில் உரப்பை ஒன்றை விநியோகித்தார் எனவும் தற்போதைய அரசாங்கம் அதை எட்டிலிருந்து பத்து மடங்கு அதிகரித்து விட்டது என்று கூறினார்கள்.

இன்று அதன் விலை ரூ 3000 க்கு மேல் போய்விட்டது என்றார்கள். தற்போதும் உரம் கிடைக்காது தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கூறினார்கள். இவ்வாறு செய்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மைத்திரிக்கு நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்று கேட்டார்கள்.

மேலும், ஊழலில் ஈடுபட்டதாக அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் ஏன் சட்டம் முன்பு ஆஜராக்கப்படவில்லை என்று கேட்டார்கள். வழமை போல் அரசியல் காரணங்களுக்காகத்தான் அவர்கள் ஊழல் பேர்வழிகள் என்று குறிப்பிடப்பட்டார்கள் என்றும் உண்மையில் அவ்வாறு இருந்திருக்க முடியாதென்றும் சிங்கள மக்களிடையே ஒரு கருத்து வலுப்பெற்றிருந்தது போல்த் தெரிந்தது.

மூன்றாவதாக தமிழ் அரசியல்த் தலைவர்கள் இடைக்கால அறிக்கையில் இல்லாததை இருப்பதாகக் கூறப்போய் அது சிங்கள மக்களின் சந்தேகத்தைக் கிளப்பி விட்டது. அதனையும் அவர்களே குறிப்பிட்டார்கள். குறிப்பிட்ட ஒரு தமிழ்ப் பாராளுமன்ற அங்கத்தவர் தமிழர்களைக் கவர பொய் பேசப்போய் அதைச் சிங்களவர்கள் உண்மை என்று நம்பி விட்டார்கள்.

நான்காவது ஆளும் கட்சிக்குள் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் உள்நுழைந்ததால் நிலைமை மோசமடைந்தது. ஒரு பலமுடைய தலைமைத்துவம் இல்லாது இரு தலைமைப் பீடங்கள் இருந்து வந்தமையும் குறையாகக் கூறப்பட்டது.

ஐந்தாவது தாம் பதவிக்கு வந்தமை எம்ம்வர்களின் ஒத்துழைப்புடன் என்பதை அரசாங்கம் மறந்து விட்டுள்ளமை அவர்களையே சாடியது. தமது கடமை என்ன என்பதில் ஆளும் கட்சி பிழையான சிந்தனைகளைக் கொண்டிருந்தது.

இவை யாவும் மஹிந்தவின் நிலையை வலுவூட்டச் செய்தது.

No comments

Powered by Blogger.