February 16, 2018

மஹிந்தவின் வெற்றியும், மதியிழந்த மாமனிதர்களும்..!!

நடந்து முடிந்த உள்@ராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாடளாவியரீதியில் அமோக வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பாக எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்சி யடைகின்றேன்.

மேற்படி உள்@ராட்சி  மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருவதனை ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது.

எது எவ்வாறு இருந்தாலும் பெரும்பாண்மையான மகக்கள் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே பெரிதும் விரும்புகின்றார்கள் என்பதுவே உண்மையாகும். ஏனெனில் தேர்தல் காலங்களில் ஆளும் தரப்பைச் சேர்ந்த  ஐ.தே.கட்சி ää சுதந்நிர கட்சி மற்றும் சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளைப் பிதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் மற்றும் பாறாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர் தங்களது தேர்தல் பிரச்சாரங்களின் போது நீங்கள் ஆளும் கட்சியாகிய எம்மைத்தான் ஆதரிக்க வேண்டும் அப்போதுதான் உங்கள் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவ்வாறு எமக்கு வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் மத்திய அரசால் வழங்கப்படவுள்ள எந்தவொரு வரப்பிரசாதமும் உங்களை வந்தடையாது என்றெல்லாம் கூறி வாக்காளர்களை அச்சுறுத்திப் பிரச்சாரம் செய்து வந்ததனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

என்றாலும் மக்கள் உங்களின் எந்தவொரு வரப்பிரசாதமும் தேவையில்லை எமக்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி மட்டுமே வேண்டும் என்பதனை மிகத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதனைப் புத்தியுள்ள அனைவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இத்தேர்தல் சிறிய தேர்தல் என்று அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் அது பாராளுமன்றத் தேர்தல் போன்ற பெரிய தேர்தலையும் விட பாரிய தாக்கத்தினை சமகால அரசியலில் தோற்றுவித்துள்ளது. அதற்கான முதல் முக்கிய காரணம் இந்த நாட்டு பெரும் பாண்மை மக்களின் தேவை மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய தலைமை மாத்திரமே என்பதுவேயாகும்.

அடுத்து மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடய  வழிகாட்டலில் போட்டியிட்ட சிறீ லங்கா பொதுசன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் அனைவரும் கட்சிக்காகவன்றி மஹிந்த ராஜபக்ஷ எனும் ஒரு தனி மனிதனுக்காகவே வாக்களித்தார்கள் என்பதுவே யதர்த்தமாகும்.

இதனைப் புரிந்து கொள்ள முடியாத அல்லது புரிந்து கொண்டே மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவரின் வெற்றியினைக் குறைத்து மதிப்பபிடுவதனைப் பார்கின்றோம்.

சிலர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய வாக்குகளுடன் ஏனைய ககட்சிகள் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டால் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய வாக்கின் விகிதம் குறைந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர் இந்த வாதம் முற்றிலும் அறிவுக்குப் புறம்பான திரிபு படுத்தப்பட்ட மிக முட்டாள்தனமான வாதமாகும்.
ஏனெனில் கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்கும் போது அன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 4ää732ää664 வாக்குகளைப் பெற்றது இது அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 42.38 வீதமாகும்  இதே நேரம் அண்மையில் நடைபெற்ற உள்@ராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 4ää968ää762 இது  அளிக்கப்பட்ட மொத்த வாக்கில்  44.69 வீதமாகும் எனவே 2015 விட 2018ல் 2.31 வீத வாக்கு அதிகரித்துள்ளது

அவ்வாறே கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.தே. கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 5ää098ää916 இது  அளிக்கப்பட்ட மொத்த வாக்கில்  45.66 வீதமாகும் இதே நேரம் அண்மையில் நடைபெற்ற உள்@ராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அக்கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 3ää625ää510 இது  அளிக்கப்பட்ட மொத்த வாக்கில்  32.61 வீதமாகும் எனவே இக்கட்சியானது 2015 விட 2018ல் 13.05வீத வாக்கு வீழ்ச்சிடைந்துள்ளது.

இதில் சுவாரஸ்யமான விடயம் யாதெனில் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் போட்டியிட்ட சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு. முன்னணி ஆகியன பெற்ற 1ää487ää960 வாக்குகளையும் ஐ.தே. கட்சியுடன் இணைணத்து மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய வாக்குகளின் விகிதத்தினைக் குகுறைக்க முயற்சிக்கின்றனர் இந்த முயற்சி முற்றிலும் நியாயமற்றதாகும் நியாயமாகப் பார்த்தால் இந்த 1ää487ää960 வாக்குகளும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே சேர வேண்டும் ஏனெனில் கடந்தப் பொதுத் தேர்தலில் மைத்திரி மஹிந்த ஆகிய இருவரும் ஒரே அணியில்தான் இருந்தனர் ஆகவே மைத்திரி தனியாகப் போட்டியிடாதிருந்தால் அந்த வாக்குகளும் மஹிந்த அவர்களுக்கே சென்றிருக்கும். அவ்வாறு பார்குகின்ற போது மஹிந்தவின் வாக்குகளின் விகிதம் 58.57 விகிதமாக உயர்வடைய இடமுண்டு.

மௌலவி முனாப் நுபார்தீன்

4 கருத்துரைகள்:

Yes, we need many Allamas like you for calling Mahinda as your at Holiness.

தலையங்கத்தில் ஓர் சிறு திருத்தம் செய்தால் பொருத்தமாக இருக்கும்:

'மஹிந்தவின் வெற்றியும் மதியிழந்த இழிநிலை மனிதரும்'

vakkalaththu vangunathu poathum saththamillama padungo........

Post a Comment