Header Ads



மௌலவி ஹாறூனுக்கு ஆதரவாக, சதுரிக்கா களமிறங்கினார்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், இலங்கை திரு நாட்டின் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன அவர்களின் புதல்வி சதுரிக்கா சிறிசேன அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ் ஹாறூன் ஸஹ்வி அவர்களின் அழைப்பினை  ஏற்று இன்று  (01.02.2018 வியாழக்கிழமை) ஒட்டமாவடிக்கு வருகை தந்தார்.

இதன் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளரின் மக்கள் தொடர்புக் காரியாலயத்தை திறந்து வைத்ததோடு, அல் கிம்மா நிறுவனத்தினையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து எல்லை வீதி மீராவோடையில் உள்ள அந்நூர் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிருக்கான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் கட்சியின் வட்டாரத் தலைவர் நியமனங்களையும் வழங்கிவைத்தார்.

மேலும் மாவட்ட அமைப்பாளர் காரியாலயம் ஓட்டமாவடி 3ம் வட்டார தேர்தல் காரியாலயம் ஆகியவற்றையும் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஐ.அஸ்பாக்



1 comment:

  1. There should be code of conduct for Moulavies that they should not involve in politics.moulavies specially Niyaz Moulavi and Rizvi Mufthi destroyed the Muslim world by supporting and rescuing Mahinda and his family from the gallows.

    All the problem in Islamic world and Srilanka Muslims were escalated after 2010 the year in which UN resolution, against Srilanka and Rajapaksha was defeated by Muslim countries which was requested by Rizvi Mufthi who visited UNO office in Geneva against UNO and America without understanding the consequences if any body going against UNO and America.Such a things are done by powerful countries with veto power.But these Moulavies did it.So Moulavies involve in politics and intermingle with politicians should be stop.

    ReplyDelete

Powered by Blogger.