Header Ads



நான் எந்த மன்னிப்பும், வழங்க மாட்டேன் - ஜனாதிபதி

கடந்த அரசாங்கத்தின் திருடர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் திருடர்களுக்கும் எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு எந்தளவுக்கு காணாமல் போன சம்பவங்கள் நடந்தன? வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் போருக்கு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.

வெள்ளை வான்களில் வந்து ஆட்களை கடத்திச் சென்றனர். ஊடக நிறுவனங்களுக்கு தீ வைத்தனர். நான் ஜனாதிபதியாக பதவியேற்று மூன்று ஆண்டுகள். நாட்டில் எவரும் காணாமல் போகவில்லை.

இலங்கை மத்திய வங்கியில் 2008 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை கொள்ளையடிப்புகள் நடந்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறியுள்ளது.

இதனால், கடந்த அரசாங்கத்தின் திருடர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் திருடர்களுக்கும் நான் எந்த மன்னிப்பும் வழங்க மாட்டேன்.

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் நடந்த கோடிக்கணக்கான ரூபா நிதி மோசடி குறித்து விசாரிக்க நான் அண்மையில் ஆணைக்குழுவை நியமித்தேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Do Not Make Drama... You are a Best ACTOR and our countries talking DUMMY.
    Until now we Don't see you are arresting any of BIG THIEF... .
    Of cause you will say.. you need more time.. until your time out.... DRAMA..

    ReplyDelete

Powered by Blogger.