Header Ads



உலக இறுதி தீர்ப்புநாள் - திருக்குர்ஆன், விஞ்ஞானம் உறுதி

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)       

படித்து பட்டம் பெற்று வக்கீல் தொழில் செய்யும் தொழாத நண்பர் ஒருவர் தொழுகைக்கு செல்வோரிடம் சொல்வார், போங்கடா போங்க நீங்கெல்லாம் சுவர்க்கம் போவீங்களாக்கும், நாங்க என்ன நரகத்திற்கு போவோமாக்கும், பைத்தியக்கார செயல் என்று கேலியாக. அப்படி என்ன அல் குர்ஆனில், இறுதி தீர்ப்பு நாள்’ பற்றி கூறப் பட்டுள்ளது,

அது என்ன பொய்யா என்று அவருக்குத் தோன்றலாம், ஆனால் நவீன விஞ்ஞானமும் அதனை அறுதி இட்டு உறுதியாக சொல்கின்றது என்பதினை இதன் மூலம் விளக்கக் கடமைப்பட்டுள்ளேன்!

திருக்குர்ஆன் அத்தியாம் 81, அதக்வீர்-சுருட்டுதல், அத்தியாயம் 82, அல் இன் பிதார் - வெடித்துப் போகுதல், அத்தியாயம் 99, அல்ஜில்ஜால்-அதிர்ச்சி என்ற அத்தியாயங்கள் அது பற்றி தெளிவாக 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலத்திற்கு வகி மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ் எடுத்து கூறி மக்களுக்கு எச்சரிக்கை விடுங்கள் என்று கூறியுள்ளான்.

அது சரி இறுதி நாள் எப்படி இருக்கும் என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது நீங்கள் கேட்கலாம்:

அவைகள்:

1) பூமியானது அடிப்பாகத்திலிருந்து கடுமையான அசைவை வெளிப்படுத்தி உள்ளே உள்ளவையினை வெளியே கொட்டும்போது

2) பூமி வெடித்து தன் சுமையை வெளிப் படுத்தும்போது

3) சூரியன் மேற்கில் உதிக்கும்

4 சந்திரன் இரண்டாக பிளவு படும்போது

5) நட்சத்திரங்கள் உதிரும்

6) மலைகள் பஞ்சாய் பறக்கும்போது

7) கடல்கள் ஆவியாகி வானத்துடன் கலக்கும்போது

8) மண்ணறைகள் அசைந்து அடக்கப் பட்டோர் ஒன்று சேரும்போது

9) விலங்கினங்கள் ஓரிடத்தில் கூடும்போது

10) வானமும் பிளவு படும்போது

மேலே கூறப்பட்டவை இறைவனை நம்பாத அறிவு ஜீவிகளுக்கு கட்டுக் கதைபோல தெரியலாம். ஆனால் எல்லாம் கற்றுத் தெரிந்த பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் தனது நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்பு இறுதி தீர்ப்பு நாளை உறுதி கூறுகிறார் என்றால் என்னே ஆச்சரியம்.

ஹாக்கின்ஸ் உலக விஞ்ஞானிகள் அடங்கிய டென்சென்ட் டபுள்யூ ஈ சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நவம்பர் முதல் வாரத்தில் நடந்த கருத்தரங்கில் வீடியோ மூலம் விளக்கமாக மனித வர்க்கம் பெருக்கத்தாலும், அதிகமான வெப்பத்தின் உபயோகத்தினாலும் பூமி வெடித்துச் சிதறி மக்கள் இனம் 2600க்குள் அழிவைத்தேடும். பூமி வெடித்துச் சிதறி ஒரு எரிமலையாக மாறும். மக்கள் வாழ்வதிற்காக வானில் ஏதோ ஒரு உலோகம் இருக்கும் என்றும் அறிவுப் பூர்வமான ஆராய்ச்சிக்குப் பின்பு கூறியிருக்கின்றார்.

ஆகவே உலக இறுதிநாள் ஒன்று இருக்கின்றது என்று அறிவுப்பூர்வமாக ஆராய்ச்சியில் எடுத்து சொல்கிறார் விஞ்ஞானி ஹாக்கின்ஸ். அதனையே தான் திருக்குர்ஆனும் ஆணித்தரமாக சொல்கிறது. எங்கே பெயரளவிற்கு முஸ்லிமாக இருக்கும் அறிவு ஜீவிகளுக்குத் தெரியப் போகிறது!

ஒருவர் அணு அளவு நன்மை செய்தாலும், இறைக்கவனுக்கு இணை வைக்காமலும், இறைவனுக்கு நன்றி செலுத்தியும் வாழ்கின்றானோ அவனுக்கு மறுமை நாளில் சுவர்க்கம் நிச்சயமாக உண்டு என்பதயும், எவர் அணுவளவு தீமை செய்தாரோ, இணை வைத்தாரோ, படைத்த இறைவனுக்கு தொழுகைமூலம் நன்றி செலுத்தவில்லையோ அவருக்கு நிச்சயமாக நரகம் உண்டு என்பதை எந்த அறிவு ஜீவியும் மறக்க வேண்டாம்!

1 comment:

  1. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.)
    (அல்குர்ஆன் : 23:115)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.