Header Ads



அநியாயக்காரனுக்குரிய தண்டனை


-Mohamed Basir-

இறைவன் அநியாயக்காரனை மிக விரைவாகத் தண்டிப்பான் என்ற மனப்பதிவு பலரிடம் உள்ளது. இது தவறான புரிதலாகும். நான்கு கட்டங்களை கடந்துதான் அநியாயக்காரன் தண்டனை பெறுகிறான்.

கட்டம் -1

நிதானம் காத்தலும் அவகாசமளித்தலும்

“நாம் அவர்களுக்கு நீண்ட அவகாசம் அளிக்கின்றோம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சித் திட்டம் மிகவும் உறுதியானது“ (7-183).
அநியாயக்காரன் தான் புரிந்த குற்றத்திலிருந்து மீண்டு பாவமன்னிப்பு கேட்கட்டும் என்பதற்காக அல்லாஹு இந்த அவகாசத்தை வழங்குகிறான்.

கட்டம் -2

படிப்படியாக பிடித்தல்

“அவர்களைப் படிப்படியாக நாம் பிடிப்போம்” (7-182).
படிப்படியாக பிடிப்போம் என்பதனூடாக உலகம் அவர்களுக்கு நெருக்கடியாக மாறிவிடும் என்பதல்ல. உலகம் அவர்களுக்கு திறந்து கொடுக்கப்படும். அவர்களுக்கு மேலும் அந்தஸ்துகள் கிடைக்கும். சுகபோகங்களைப் பெறுவது இலகுவானதாக மாறும். அவர்கள் கேட்பதை, எதிர்பார்ப்பதை அல்லாஹ் வழங்குவான். மட்டுமன்றி, கேட்டதற்கு மேலாகவும் வழங்குவான். படி என்பது உயரத்தில் ஏறுவதையும், பள்ளத்தினுள் சறுக்குவதையும்தானே குறிக்கிறது.

கட்டம் -3

அலங்கரித்துக் காட்டல்

“ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் செயல்களை அலங்கரித்தான்” (அந்நம்ல்-24).

இக்கட்டத்தில் அநியாயக் காரனின் உள்ளம் மரணித்து விடுகிறது. இங்கு அவன் தான் சரியெனக் கருதுவதை கட்டாயம் நடைறைப்படுத்திட வேண்டிய ஒன்றாகப் கருதுகிறான். எனவே அவன் மேற்கொள்ளும் எந்தவொன்றையும் கண்டிப்பதற்கு முடியாமல் அவனது உள்ளம் இறந்து போய்விடுகிறது.

கட்டம் -4

தண்டனை

“அநியாயம் செய்யும் ஊராரை அவன் பிடித்தால், இவ்வாறுதான் அவனது பிடி இருக்கும். நிச்சயமாக அவனது பிடி வேதனையும் கடினமுமிக்கது” (ஹுத் 102)

இக்கட்டத்திலேயே அநியாயக்காரன் மீது அல்லாஹ்வின் தண்டனை இறங்குகிறது. அத்தண்டனை மிக மிகக் கொடூரமானதாகவும், கடுமையானதாகவும் காணப்படும்

கலாநிதி தாரிக் சுவைதான்

No comments

Powered by Blogger.