Header Ads



மூங்கில் தடியில் சங்கிலியால் கட்டி, மாணவனை தாக்கிய பிக்கு

பஸ்ஸர – மடுகஸ்தாலவ கனிஷ்ட வித்தியாலயத்தில்  ஆசிரியராக கடமைபுரியும் பிக்கு ஒருவர் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை தாக்கியதனால் மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்வபம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த மாணவர் பஸ்ஸர மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

பாடசாலைகளில் வீட்டு வேலைகள் செய்யாத மாணவர்களுக்கு குறித்த பிக்கு தண்டனை வழங்கியுள்ளார்.

இதன்போது, ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கு சிறத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குருணாகல் மாவத்தகம சாமோதய தேசிய பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவரை தாக்கிய ஆசிரியர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், ஆசிரியரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மாவத்தகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரின் ஆலோசனைகளுக்கு அமைய, மூங்கில் தடியில் மாணவனை சங்கிலியால் கட்டி ஏனைய மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கல்வித்துறை பொறுப்பதிகாரிகளிடம் கோரப்பட்ட அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கிடைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஸ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மகியங்கனையில் காணாமல் போன 12 வயதான சிறுமியொருவர் வெல்லவாய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தமது சிறு தந்தையால் சித்திரவதை செய்யப்படுவதனால் தாம் வீட்டில் இருந்து தப்பிச் சென்றதாக சிறுமி காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சிறுமியின் தாய் மற்றும் சிறு தந்தையினால் காவல்துறைக்கு முறைப்பாடொன்றை செய்துள்ள நிலையில், சிறுமி அவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.