Header Ads



தேர்தல் திணைக்கள முதலாவது, முஸ்லிம் பெண் அதிகாரி கடமை பொறுப்பேற்பு

-பாறுக் ஷிஹான்-

தேர்தல்கள் திணைக்களத்தில் முதலாவது முஸ்லிம் பெண் அதிகாரி கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.

பதுளை மாவட்டம் குருத்தலாவையைச் சேர்ந்த 28 வயதான அப்துல் நஹீம் நஸ்லூன் நுஸ்ரத் என்பவரே புதன்கிழமை 28.02.2018 உதவித் தேர்தல் ஆணையாளராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில், இலங்கையின் 2 முஸ்லிம் பெண்களில் ஒருவராகத் தெரிவாகி பயிற்சிகளை முடித்துக் கொண்ட பின்னர் இந்த நியமனத்தை அவர் பெற்றுள்ளார்.
இவரே ஊவா மாகாணத்தின் முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக நிருவாக சேவைக்குத் தெரிவாகி சாதனை படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் சிறப்பு முதுமாணிப் பட்டம் பெற்ற இவர், குருத்தலாவை அந்நூர் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஐ. அப்துல் நஹீம் மற்றும் ஆசிரியை பழீலா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

No comments

Powered by Blogger.