Header Ads



வீடியோ காட்டி, ஜனாதிபதிக்கு விளக்கிய அதாவுல்லா


அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு இன்று பி.ப. 07.30 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. 

இச்சந்திப்பின்போது அம்பாரையில் ஏற்பட்ட இனக்கலவரம் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதென்பதை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள்இ அங்கு சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் உடமைகளையூம் வீடியோ காணொலி மூலம் சுட்டிக் காட்டினார். 

இந்த இனக்கலவரத்தின் போது முற்று முழுதாக சேதமடைந்த அம்பாரை பள்ளிவாசலை அரச செலவில் மீள்நிர்மாணம் செய்ய வேண்டுமெனவூம், சேதங்களுக்குள்ளான முஸ்லிம் வர்த்தகர்களின் உடமைகள், சொத்துக்களுக்கு ஜனாதிபதியின் விஷேட கவனத்தினைச் செலுத்தி அதற்கான நஷ்ட ஈட்டினைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவூம் வலியூறுத்திக் கூறினார். அத்தோடுஇ இக்கலவரத்திற்கு காரணமானவர்களை பாரபட்சமின்றி கைது செய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவூம் வேண்டிக் கொண்டார். 

இதற்கமைவாக இக்கலவரத்தினை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யூமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபரை வேண்டிக் கொண்ட ஜனாதிபதி அவர்கள், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரைத் தொடர்பு கொண்டு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் சேதங்களுக்கான நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுப்பதாகவூம் முன்னாள் அமைச்சர். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களிடம் உறுதியளித்தார். 

இச்சந்திப்போது தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ். உதுமலெப்பை மற்றும் தேசிய காங்கிரஸின் பொருளாளர். ஜே.எம். வஸீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. Any single word from his lips....?
    Oh my god, make sure there is any sugar problem...or water problem..?
    He will talk only about it...

    ReplyDelete

Powered by Blogger.