Header Ads



எங்களுடன் இருந்த மைத்திரியா, இவர் என எனக்கு எண்ண தோன்றுகின்றது - மகிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தை அமைக்க இணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தாலும் மக்கள் அதனை விரும்பவில்லை என்பதால், தானும் அதனை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி இறக்குவானை பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அன்று மணிக்ககல் அகழ்வதில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் தற்போது அதுவும் முடியாது. அது மாத்திரமல்ல எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் மிளகு மீள் ஏற்றுமதியை நிறுத்த போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

தற்போதே அதனை நிறுத்தலாமே. ஜனாதிபதி புதுமையாக கதைகளை கூறுகிறார். எங்களுடன் இருந்த மைத்திரியா இவர் என எனக்கு எண்ண தோன்றுகின்றது.

நாங்கள் நாட்டை கட்டியெழுப்பினோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். கிராமத்திற்கு அபிவிருத்தியை கொண்டு சென்றோம். யுத்த அச்சமின்றி அபிவிருத்தியடைந்து வந்த நாடு புதிய மாற்றத்தினால் அழிந்து வருகிறது. நாங்கள் வாங்கியதை விட இரண்டு மடங்கு கடனை வாங்கி இவர்கள் செய்தது எதுவுமில்லை.

திறைசேரியின் பணம் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருப்பதாக இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி கூறுகிறார். நாங்கள் கூறவில்லை. நாட்டின் ஜனாதிபதி இதனை கூறுகிறார் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.