Header Ads



சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம்கள், மறக்கப்பட்டது ஏன்..??

04.02.1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றது. 

அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த,சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள்,சுதந்திர போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம். 

இலங்கையின் சுதந்திரத்திற்காக முஸ்லிம்களும் போராடினார்கள்,குரல் கொடுத்தார்கள்,ஆதரவு வழங்கினார்கள்.என்பதற்கான ஆதாரங்கள் இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன. 

சுதந்திரம் கிடைத்து 69 ஆண்டுகளுக்குள் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த முஸ்லிம் தேசிய வீரர்களின் பெயர்கள் இலங்கையின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து படிப்படியாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. 

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த முஸ்லிம் தேச பக்தர்கள், 

1. சேகு டீ டீ(தோப்பூர்), 

2. முகம்மது, சலாம் பட்டி உடையார்(குச்சவெளி), 

3. அபூபக்கர் ஈஸா(முகாந்தி ரம் சம்மாந்துறை), 

4. மீரா குசைன் காரியப்பர்(சம்மாந்துறை), 

5. உசன் லெப்பை உதுமாலெப்பை(சம்மாந்துறை), 

6. அனீஸ் லெப்பை(மருதமுனை), 

இலங்கை சட்டக்கோவை பாகம் 1,பக்கம் 77,78.(1786-1833), 

இலங்கையின் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தேசிய வீரர்கள். 

1. சட்ட வல்லுனர்:முகம்மது காசிம் சித்தி லெப்பை(M.C.Sithy Lebbai) 

2. சட்ட வல்லுனர்:I.L.M.Abdul Azeez, 

1924 ல் நடை பெற்ற சட்ட சபை தேர்தலில் வெற்றியீட்டிய சட்டசபை உறுப்பினர்களான: 

1. சேர்:மாக்கான் மாக்கார் 
2. N.H.M.அப்துல்காதர், 
3. கலாநிதி:துவான் புர்கானுதீன் ஜாயா(T.B.Jaya), 

Ø 1939.03.05 ம் திகதி முஸ்லிம் அரசியல் மாநாட்டில் 

கலாநிதி:பதியுத்தீன் மஹ்மூத் சுதந்திரத்திற்கு ஆதரவளித்து பேசினார். 

Ø 1945.11.09 ல் டொமினியன் அந்தஸ்து வழங்கும் சட்டமூலத்திற்கான வாக்களிப்பில் 

1. சேர்:ராசீக் பரீட் 
2. டொக்டர்:M.C.M.கலீல்
3. T.B.Jaya 
போன்றவர்கள் தனது ஆதரவை வழங்கி வாக்களித்தனர். 

இப்போது, இவர்களில் பலர் மறக்கடிக்கப்பட்டு 

1. M.C.சித்தி லெப்பை, 
2 T.B.Jaya ஆகிய இருவரின் பெயர்கள் மாத்திரம் நினைவு கூரப்பட்டு வருகின்றன. 

இலங்கையின் சுதந்திரம் பற்றி முஸ்லிம் தலைவர்கள்

ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொள்ளும் ஆண்டு தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதன் உப தலைவரான டி.பீ ஜாயா 1919ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொள்ளும் நேரத்தில் நடைபெற்ற அரசாங்க சபை கூட்டத்தில் உரையாற்றும் போது “இன ரீதியான சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதை விட நாட்டுக்கான சுதந்திரத்தை பெற்றுக்கொள்வது முக்கியமானது” எனக் குறிப்பிட்டார்.

சேர் டி.பீ ஜாயா சுதந்திரத்திற்காக போராடியதை கண்ணியப்படுத்தும் முகமாக கொழும்பு நகர வீதி ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

சேர் மாக்கான் மாக்கார் கூறும்போது “பெரும்பான்மையாக இருக்கும் பெரும்பான்மையாக இனம் ஒரு போதும் சிறுபான்மை ஆக்கப்படுவதை நாம் விரும்ப மாட்டோம்”.

1945ம் ஆண்டு அரசியல் யாப்பு திருத்த மாநாட்டில் சேர் ராசிக் பரீத் உரையாற்றுகையில் “எங்களிடம் உள்ள அரசியல் அறிவும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்கின்ற உணர்வும் நான் இந்த நாட்டிற்கு டோமீனியன் அந்தஸ்தைக் கூறும் சிங்களவர்களுடன் இணைந்து போராடத் தூண்டுகின்றது” என்றார். 

மரக்களே எப்படி வந்தது? 

2ம் இராஜசிங்க மன்னனை கொலை செய்வதற்காக் போர்த்துக்கேயப்படை விரட்டி வந்த சமயம் அவனைக் காப்பாற்றி தன்னுயிரைக் கொடுத்த முஸ்லிம் பெண்ணொருவரை நினைத்து பெருமையுடன் “மா ரெகபு லே” (என்னைக்காப்பற்றிய இரத்தம்) என்று மன்னன் கூறினான். 

இந்த நாட்டு மன்னனின் உயிர் காத்த உத்தமியான இந்த பெண்ணின் குடும்பதார்களுக்காக சன்மானமாக பங்கரகம என்ற ஊரையே உயில் எழுதி கொடுத்ததாக வரலாறு கூறுகின்றது. பங்கரகம கிராமத்திற்காக எழுதப்பட்டஉயில் 1956 வரை பதுளை கச்சேரியில் இருந்ததாக பங்கரகமையை சேர்ந்த காலம் சென்ற அப்துல் மஜீது என்ற முதியவர் ஒரு முறை கூறியுள்ளார்

இந்த வரலாற்று சம்பவம் 1982ம் ஆண்டில் பதியப்பட்ட அப்போதைய ஆண்டு மூன்று தமிழ் பாடநூலில் கூட பதிவு செய்யபட்டுள்ளது. 

இலங்கையர்களின் ஆடைக்கலாச்சாரம் வெள்ளையர்களால் புறக்கணிக்கப்பட்ட போது அக்கலாச்சாரத்தை பாதுகாப்போம் என்ற அடிப்படையில் ஹோட்டல் ஒன்று மாக்கான் மாக்கார் அவர்களால் திறக்கப்பட்டது.

போர்த்துக்கேயர்கள் 1638ம் ஆண்டு கண்டி மானகரத்திட்கு எதிராக யுத்தம் செய்த சமயம் முஸ்லிம்கள் அதனைப் பாதுகாத்தனர். இதன் காரணமாகவே 2ம் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னனால் அக்குரணை நகரம் முஸ்லிம்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. 

போர்த்துக்கேயரின் ஆட்ச்சிக்காலத்தில் ஒல்லாந்தரின் வருகையின் ஆரம்ப காலத்தில் கண்டிய அரசினால் கண்டியைப் பாதுகப்பதற்கு ஒல்லாந்தரிடம் உதவி கோரினர் அதற்கு அரசிற்கு உதவியாக முஸ்லிம்கள் இருந்தார்கள் என்ற காரணத்தினால் மாத்தறை நகரில் 25 முஸ்லிம்கள் போர்த்துக்கேயரினால் கொலை செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.