Header Ads



முக்­கிய அமைச்­சுக்­க­ளை, குறி­வைக்கும் ஜனா­தி­பதி

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அமைத்த  தேசிய அர­சாங்­கத்தில் பாரிய நெருக்­கடி ஏற்­பட்­டுள்ள நிலையில் இரண்டு தரப்­பி­னரும் தனித்து ஆட்சி அமைக்கும் நோக்கில் பாரிய முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் மஹிந்த தரப்பின் ஆத­ரவைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் முயற்­சியில் இறங்­கி­யுள்­ளது.   

எனினும் இவ்­வாறு தனித்து ஆட்சி அமைக்கும்  முயற்சி வெற்­றி­பெ­றாமல் தேசிய அர­சாங்­கமே தொட­ரு­மாயின்  முக்­கிய அமைச்­சுக்­களை  சுதந்­தி­ரக்­கட்­சியின் பக்கம்  எடுத்­துக்­கொள்­வது  தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  அவ­தானம் செலுத்­தி­யி­ருக்­கின்றார். 

விசே­ட­மாக நிதி அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு,  சர்­வ­தேச வர்த்­தக மூலோ­பாய அமைச்சு, மீள்­கு­டி­யேற்ற அமைச்சு ஆகி­ய­வற்றை  சுதந்­தி­ரக்­கட்­சியின் பக்கம் எடுக்­கும்­நோக்கில் ஜனா­தி­பதி அவ­தானம் செலுத்­தி­யி­ருக்­கின்றார். 

பொரு­ளா­தாரம் மற்றும் நாட்டின்   அமைதி தொடர்­பி­லான  பொறுப்­புக்­களை கொண்­டுள்ள இந்த அமைச்­சுக்­களை தம்­வசம் எடுப்­ப­தற்கே சுதந்­தி­ரக்­கட்சி முயற்­சிக்­கின்­றது. 

சுதந்­தி­ரக்­கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் முயற்­சிகள் ஒரு­பக்கம் இடம்­பெறும் சூழலில் மறு­பக்கம் தேசிய அர­சாங்­கத்தை எவ்­வாறு முன்­னெ­டுத்து செல்­வது குறித்தும் ஆராயப்­பட்டு வரு­கின்­றது.  இந்த நிலை­யி­லேயே  முக்­கி­ய­மான அமைச்சுக்களை ஐக்கிய தேசியக்கட்சியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நோக்கில்  ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன அவதானம் செலுத் தியிருக்கின்றார்.

No comments

Powered by Blogger.