Header Ads



தப்பிச்சென்ற கோத்தாபய, நாடு திரும்பினால் கைது - ராஜித

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மகரவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச, கைது செய்யப்படும் அச்சத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

உக்ரேனிடம் மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த நீதி விசாரணைகளில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அறிந்தே கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குத் தப்பியோடியுள்ளார்.

அவர் வரும் 10ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்த பின்னர், வரும் 12ஆம் நாள், நாடு திரும்பவுள்ளார்.

அவரைக் கைது செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கோத்தாபய ராஜபக்ச சிறைக்கு அனுப்பப்படுவார்.

மிக் போர் விமானக் கொள்வனவின் மூலம் கிடைத்த நிதி, ஹொங்கொங் வங்கிகளில் ஐந்து இந்தியர்களின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. He told us some time ago, Namal will be arrested as they found huge money in Dubai Bank under Namal's account. What has happened? Now He has come out with another lie.

    ReplyDelete
  2. Politician Rajitha Seneratne is the BIGGEST liar among politicians in Sri Lanka. He told lies during the time he was with Chandrika and told big lies when he was with President Mahinda Rajapaksa. In 2014 he told so many lies about the Aluthgama/Beruwela violences after master minding the roits and running away to India. Now Mahinda has confirmed what that Rjitha Seneratne was the Minister who planned it. Today he is telling the BIGGEST LIE EVER - about Gothabaya Rajapaksa. Rajitha Seneratne and his son Chathura are the biggest CURSE to Sri Lanka politics. Where is Chathura Seneratne? He is not even heard in the political arena or in parliament these days.
    These politicians should be chased away by the Muslim voters all over Sri Lanka if the come to ask for your votes, Insha Allah.
    "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.