Header Ads



வடமாகாண சபையின் மோசமான செயற்பாடு - 60 வீத நிதி திரும்பிவந்தது - ஜனாதிபதி குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு மீள்குடியமர்வுக்காக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம் மீளத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

“மீள்குடியேற்றத்துக்காக, கடந்த ஆண்டு வடக்கிற்கு அனுப்பிய நிதியில், 60 வீதமான நிதி செலவழிக்கப்படாமல் மீண்டும் அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

நாங்கள் அந்த நிதிய வீடுகளை அமைப்பதற்காக வழங்கியிருந்தோம்.

இவ்வாறு நிதி திரும்பிச் செல்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையீனமே காரணம். இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தான் பாதிப்பு.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. I think the fund for muslim colognisation in north has bounced back. Welldone NPC

    ReplyDelete
  2. When terrorits rule NPC with a racist mindset, this is what happens...

    ReplyDelete
  3. @ghost
    In alquran, public demogratically elected public servants are described as "terroristss"
    Real terrorists are described as islamic warriors

    ReplyDelete

Powered by Blogger.