Header Ads



4 அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு ஓட்டம்

அமைச்சர்கள் பலர் இன்றைய தினம் வெளிநாடுகளுக்கு பறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இன்று அதிகாலை (25) 3 மணியளவில் Q.R 669 கட்டார் விமானம் மூலம் டோஹா கட்டார் நோக்கி பயணமாகியுள்ளதாகவும், அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று பிற்பகல் 1.55 மணியளவில் இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான UL- 195 விமானம் மூலம் டில்லிக்கும், அமைச்சர் சரத் அமுனுகம 2.35 மணியளவில் UL- 406  விமானம் மூலம் தாய்லாந்து நோக்கி பயணமாகவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், அமைச்சர் ரவீந்திர சமரவீர இன்று பகல் 12.50 மணியளவில் இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான UL- 503 விமானம் மூலம் லண்டன் நோக்கி செல்லவுள்ள நிலையில், இன்றைய தினம் அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.