Header Ads



நெடுஞ்சாலைக்காக மோதிய 2 அமைச்சர்கள்

தற்பாது ஏற்பட்டுள்ள புதிய அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இதன்போது நெடுஞ்சாலை அமைச்சின் கீழ் இருக்கும் கிராமிய வீதிகளை தனது அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் என அமைச்சர் சம்பிக இங்கு கோரியதால் அவருக்கும் அமைச்சர் கிரியெல்லவுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதாம். 

இறுதியில் கொழும்பு மாவட்டத்திலுள்ள கிராமிய வீதிகளைத் தான் கோரியதாக சம்பிக கூறிய போதும், இதற்கு யாரும் உடன்படவில்லையாம். 

இதேவேளை, கண்டி அதிவேக நெடுஞ்சாலை தொடர்பிலும் இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாம். நெடுஞ்சாலை மூன்றாம் கட்டத்திற்கு 200 பில்லியன் ஒதுக்குவது உகந்ததல்ல என சம்பிக குற்றஞ்சாட்டினாராம். இதற்கு ஆதரவாக அமைச்சர்களான பைசர் முஸ்தபா, மஹிந்த அமரவீர போன்றவர்கள் கருத்து கூறினாலும் பிரதமரும் அமைச்சர் ராஜிதவும் நெடுஞ்சாலைக்கு ஆதரவாக பேசியிருந்தனராம். இறுதியில் குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.


அதேவேளை தற்போது நெடுஞ்சாலை அமைச்சராக கபீர் காசிம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.