Header Ads



முஸ்லிம்கள் 2 பேர் கொழும்பு பிரதிமேயர் பதவிக்கு கடும் போட்டி

கொழும்பு மா நகர சபையின் புதிய மேயராக ரோசி சேனாநாயக்க பதவியேற்கவுள்ள நிலையில், பிரதி மேயர் பதவிக்காக கடும்  போட்டித்தன்மை நிலவுவதாக, மா நகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

   கொழும்பு மா நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 353  வாக்குகளைப் பெற்று 60  ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், பிரதி மேயராகத் தெரிவு செய்யப்படுபவரும் ஐ.தே.க. வைச் சேர்ந்த ஒருவராக இருப்பதுடன், அது சிறு பான்மை இனத்தவரைச் சேர்ந்த ஒருவராக  இருக்க வேண்டும் என்பதும், மா நகர சபையின் சட்ட வரைபாகும். 

   இதன்பிரகாரம், புதிய பிரதி மேயர் பதவிக்கு மா நகர உறுப்பினர் மொஹமட் அர்ஷாத்தின் பெயர் முன் மொழியப்பட்டுள்ளது. 

   இதேவேளை, ஐ.தே.க. கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும், மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவரும், தமக்கு மிகவும் நெருங்கிய ஒருவரான எம்.ரீ.எம். இக்பால் என்பவரை, அந்த இடத்தில் நிறுத்துவது குறித்து, மிகத் தீவிரமாக முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments

Powered by Blogger.