Header Ads



பேஸ்புக்கில் 20 கோடி பேர், போலிக் கணக்குகள்

இணையத் தொடர்பு வசதி பெருகி வருவதால், இளைஞர்களின் சமூக வலைதளப் பங்களிப்பு வேகமாக அதிகரிக்கிறது. ஆனால், ஆசிய நாடுகளில், ஏராளமானவர்கள் தொடங்கும் போலிக் கணக்குகளும் அதிவேக வளர்ச்சிக்குக் காரணம் என பேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டறிக்கை தெரிவிக்கின்றது.

2017ம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த ஓராண்டில், பேஸ்புக் வலைதளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்து, 213 கோடி பயனீட்டாளர்கள் என்ற எண்ணிக்கையை எட்டியிருப்பதாகத் தெரிகிறது. மாதந்தோறும் தவறாமல் பேஸ்புக்கைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 2016 ஆண்டு வாக்கில் 186 கோடி நபர்கள் என்ற அளவிலேயே இருந்துள்ளது. 

அதேபோல, பேஸ்புக்கில் போலிக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும், 2017ம் ஆண்டு நிலவரப்படி, 20 கோடி பேர் எனவும் தெரியவந்துள்ளது. இவ்விதமான போலிக் கணக்குகள் பெருவாரியாகத் தொடங்கப்படுவது இந்தியா, இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்துதான் எனவும் பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேஸ்புக்கை அன்றாடம் பயன்படுத்தும் மக்கள் அதிகமுள்ள நாடு என பார்த்தாலும், இந்தியா, இந்தோனிஷியா மற்றும் பிரேசில் போன்றவை முன்னிலையில் உள்ளன.

No comments

Powered by Blogger.