Header Ads



இலஞ்சம் பெற்ற பொலிசுக்கு 20 வருட சிறை, குடியுரிமையும் இரத்து - கொழும்பு நீதிமன்றம் அதிரடி

20,000 ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுளம்பு பரவும் வகையில் வீட்டு சுற்றத்தை வைத்திருந்த நபர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர்வதனை தவிர்ப்பதற்காக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கையூட்டல் பெற்றுக் கொண்டுள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இவ்வாறு இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

இதில் கையூட்டல் பெற்றுக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், அவரது குடியுரிமையையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த தண்டனைகளை விதித்துள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபளிடமிருந்து கையூட்டலாக பெற்றுக் கொள்ளப்பட்ட 20,000 ரூபாவும், அபராதமாக மீளப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

2 comments:

  1. இதே நீதி இந்நாட்டில் பெரும் ஊழல் செய்துள்ள அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படுமா? 20,000/-க்கு 20 வருட தண்டனை என்றால் பில்லியன் கணக்கில் ஊழல் செய்துள்ளவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்... அப்பணத்தை பயன்படுத்திய ஊழல்வாதிகளின் குடும்பத்தினருக்கும் குடியுரிமை பரிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்..

    ReplyDelete
  2. அத்துடன் நாட்டு மக்களின் சூறையாடப்பட்ட கோடான கோடி பணத்தையும் மீண்டும் திறைசேரிக்கு ஒப்படைக்குமாறும், அதே தொகை அல்லது அதைவிட இருமடங்கு தெண்டப்பணம் அரசாங்கத்துக்கு செலுத்துமாறும் நீதிமன்றம் பணிப்புரை விடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.