February 09, 2018

முஸ்லிம்களை குழப்பும் 2 பிரச்சாரங்கள், நம்பி ஏமாறாதீர்கள்..!

முஸ்லிம் பிள்ளைகளை அரச பாடசாலைகளுக்கு அனுப்பாதீர்கள், யஹுதி நஸராக்களின் கல்வித்திட்டம்.

அதேபோன்று நோய்க்கான தடுப்பூசிகளை எடுக்காதீர்கள் அரச வைத்தியசாலைகளை நாடாதீர்கள், பிள்ளைகளை வீட்டில் பெற்றுக் கொள்ளுங்கள், என இன்னோரன்ன தவறான பிரச்சாரங்களை மார்க்கத்தின் பெயரால் சிலர் பரப்புரைகள் செய்து வருகின்றனர்.

விடயம் குறித்து தேசிய ஷுரா சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பொழுது தடுப்பூசிகள் தொடர்பாக வைத்திய நிபுனர்கள் மற்றும் உலமாக்கள் குழுவொன்றினால் விடயம் ஆரயப்பட்டு சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஆய்வுகள் அறிவறுத்தல்கள் என்பவையும் உள்வாங்கப்பட்டு சமூகத்திற்கான ஒரு வழிகாட்டல் அறிக்கை வெளியிடப்பட்டது.

நோய்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் அவசியம் அதில் வலியுறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு சில விஷமிகள் அந்த அறிக்கையை திரிவு படுத்தி நோய்க்கான தடுப்பூசிகளை பெறுவது ஆபத்தானது கூடாது என சமூக ஊடகங்களில் பரவச் செய்துள்ளனர்.

இவ்வாறான விடயங்களை பாமர மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதில் உள்ள பின்விளைவுகளை உணர்ந்து உலமாக்கள், புத்திஜீவிகள், மஸ்ஜித் நிர்வாகிகள் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும்.

நோய்த்தடுப்பு என்ற தேசிய வேலைத்திட்டத்தில் இருந்து ஒரு சமூகமாக நாம் தவிர்ந்து கொள்வதில் பல சவால்களும் இருக்கின்றன.

என்றாலும், கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் குறைநிறைகள் இருந்தால் சமூகத் தலைமைகள் உரிய மட்டத்தில் அவை குறித்து ஆராய வேண்டும், மாறாக ஒருசில தனிநபர்கள் அல்லது குழுக்கள் பாமர மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவது ஆபத்தான வழிமுறையாகும், தலை வலிக்கு தலையை துண்டித்து விடுமாறு பரப்புரைகள் மேற்கொள்ளக் கூடாது.

சுதேச மருத்துவத்துறை, நபிவழி மருத்துவம், யூனானி, ஆயுர்வேதம், ஆக்யயூபன்சர், சித்த வைத்தியம் இன்னோரன்ன துறைகள் அலோபதி வைத்தியத்துறைக்கு முற்று முழுதான பிரதியீடாக அபிவிருத்தி காணாத நிலையில் பாமர மக்களை தவறாக நாம் வழிநடாத்தக் கூடாது, அதேவேளை அவ்வாறான மாற்று பாரம்பரிய வைத்தியத் துறைகளில் கற்பதும் அவற்றை விருத்தி செய்வதும் அறிமுகம் செய்வதம் சிறந்த முனைப்புகள் என்பதிலும் சந்தேகமில்லை.

தேசிய ஷுரா சபையின் வழிகாட்டல்கள் அதன் உத்தியோக பூர்வ வலைத்தளத்தில் www.nationalshoora.com மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதோடு தேசிய ஊடகங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-Inamullah Masihudeen-

2 கருத்துரைகள்:

May Allah will protect like this un knowledgeable articles !!!!

Yes there are thousand of disguised anti Muslim activist are active among us.I came a crossed one such a person in Thableegue Jamath,who is said to have a christian father converted to Islam.He is preaching among these jamath members that not to educate their children asking them which sahabi's son became doctor,which sahabi's son became an Engineer and telling them this is belongs to yehudis
So i had an arguments with Jamath members as they were telling it ok.not only that his speech also instigating jamath members against Jamathe Islam.

This is is sorry state among Muslims who are divided into several sects and fighting each other specially Shia-sunni problem which are the result of the activities of the above mentioned disguised anti Muslim elements are the result of THE madness of the Muslims specially Saudi Arabia to converts others to Islam.

What is the west intention is that Shias and sunnis should never be together and united.so they were instigated to fight each other by this disguised as sheik,Moulavies and scholars.For that it very easy to do if the Muslims are ignorant this is their goal.

Post a Comment