Header Ads



மஹிந்தவுக்கு மெகா வெற்றி, 2 இடம் UNP - 4 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட SLFP


உள்ளுராட்சி சபைகள் 340 இல் 327 சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகப்படியான சபைகளின் அதிகாரத்தை தனித்துக் கைப்பற்றியுள்ளது. இரண்டாவது இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் மூன்றாவது இடத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தெரிவாகியுள்ளது. 

2

இதுவரையில் வெளியாகியுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் தனியாக கைப்பற்றியுள்ள சபைகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 208 உள்ளுராட்சி சபைகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 39  உள்ளுராட்சி சபைகளையும், பொதுஜன ஐக்கிய முன்னணி 03 உள்ளுராட்சி சபையையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 07 உள்ளுராட்சி சபைகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 04 உள்ளுராட்சி சபைகளையும்,  இலங்கை தமிழரசுக் கட்சி 33 உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றியுள்ளன.

ஏனைய சபைகளில் எந்தவொரு கட்சியும் தனியாக அரசாங்கம் அமைக்கும் பலத்தைப் பெறவில்லையென என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.