Header Ads



மகிந்தவுடன் இணையவுள்ள 15 பேர்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 15 பேர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வார இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 15 பேர் பொதுஜன பெரமுண கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். தற்போதைய கூட்டு அரசாங்கம் மக்களின் ஆணையை இழந்து விட்டது.

ஆகையினால், அதிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து பேசிய மகிந்த ராஜபக்ச, “அனைவரையும் தாம் வரவேற்பதாக குறிப்பிட்டார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.