Header Ads



UNP மீது ஜனாதிபதி நேரடித் தாக்குதல், முடிந்தால் விவாதம் நடத்திக் காட்டுமாறு சவால்


பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான அறிக்கை சம்பந்தமாக முடிந்தால் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்திக் காட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார். 

தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

அந்த அறிக்கைகளை உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்பிக்குமாறு வலியுறுத்தியதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் முடிந்தால் அந்த இரண்டு அறிக்கைகள் சம்பந்தமாகவும் தேர்தலுக்கு முன்னர் விவாதம் நடத்திக் காட்டுமாறு ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார். 

அந்த அறிக்கைகள் தொடர்பில் குரல் கொடுத்த அனைத்து திருடர்களும் ஒன்றிணைந்து அது தொடர்பில் விவாதம் நடத்துவதை பிற்போட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாராளுமன்ற அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின், கரங்களில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. See all My3's meetings. Talk is only about the Central Bank Bond issue; nothing else; he is unable to say the good things he has done to the people for last 3 years. People are not fool.

    ReplyDelete

Powered by Blogger.