Header Ads



UNP யிடமிருந்து பொருளாதார அமைச்சை, ஜனாதிபதி கைப்பற்றுவது தவறில்லை - ரஞ்சன்

நாட்டின் நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானவர்கள் ஊழல்வாதிகள் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியதாக கூறப்படும் கருத்து தொடர்பில் ஆராய்வதற்கு அதன் ஒலிநாடாவின் பிரதியை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டீ ஆப்ரூ, நலின் பெரேரா மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று -22- விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ள கருத்து தொடர்பிலான காணொளி நீதீமன்றத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அது குறித்து ஆராய்வதற்கு அதன் பிரதி நீதிபதிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவான நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களமும் அதுகுறித்து ஆராய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

பிரதியமைச்சரின் கருத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுவதாக அறியமுடிந்தால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வௌியே வந்த பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

பொருளாதார முகாமைத்துவத்தை தமது பொறுப்பின் கீழ் எடுப்பதாக ஜனாதிபதி கூறியிருந்த விடயம் தொடர்பில் இதன்போது வினவப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க….

மூன்று வருடங்கள் இதனை முன்னெடுப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவர் சந்தர்ப்பமளித்தார். அது தொடர்பில் அவர் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லையாயின், அவர் அதனை பெற்றுக்கொள்வதில் தவறதுமில்லை.

No comments

Powered by Blogger.