Header Ads



UNP கூட்டங்களில் உரையாற்ற, ரவிக்கு அனுமதி மறுப்பு - 24 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துகிறார்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் அவரது தீர்மானம் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணநாயக்க ஜனவரி 24 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி உரையாற்றவுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் ரவி கருணாநாயக்கவிற்கு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கூட்டு எதிரணியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமுள்ளன. 

அத்துடன் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசார கூட்டங்களுக்கு ரவி கருணாநாயக்க வருகை தந்தாலும் அவரது உரையாற்ற அனுமதி வழங்கப்படுவதில்லை. மத்திய வங்கி மோசடியை அடிப்படையாக கொண்டு ரவி கருணாநாயக்க தனது அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி வழங்கல் தொடர்பிலும் இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஜனவரி 24 ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

-எம்.எம்.மின்ஹாஜ்-

No comments

Powered by Blogger.