Header Ads



வெற்றி உறு­தி­, ஆட்சியமைப்பதும் உறுதி - SLFP

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் முத­லா­வது தேர் தல் பிர­சார கூட்­டத்தை எதிர்­வரும் 10ஆம் திகதி  அநு­ரா­த­பு­ரத்தில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கட்­சியின் அமைப்­பா­ளரும்  சமூக வலு­வூட்டல் மற்றும் நல­னோம்பு  அமைச்­ச­ரு­மான எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே  அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களின் ஆரம்ப பிர­சார கூட்­டத்தை எதிர்­வரும் 10ஆம் திகதி புதன்­கி­ழமை மாலை 2 மணிக்கு அநு­ரா­த­பு­ரத்தில் நடத்­த­வி­ருக்­கின்றோம். கட்­சியின் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்­கவின் வழி­ந­டத்­தலில் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் முத­லா­வது கூட்டம்  இடம்­பெ­ற­வுள்­ளது. 

அத்­துடன் மறுநாள் 11ஆம் திகதி கொழும்பில் ஜனா­தி­பதி தலை­மையில் பிர­சா­ரக்­கூட்டம் இடம்­பெ­ற­வுள்­ளது. அத­னைத்­தொ­டர்ந்து நாடு­பூ­ரா­கவும் இடம்­பெ­ற­வுள்ள பிர­சார கூட்­டங்­களில் பிர­தான கூட்­டங்­களில் ஜனா­தி­பதி கலந்­து­கொள்­ள­வுள்ளார்.

அத்­துடன் நாடு­பூ­ரா­கவும் பிர­தேச மட்­டங்­களில் தேர்தல் வழி­ந­டத்தல் காரி­யா­ல­யங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இவை­ய­னைத்­தையும் வழி நடத்தும் வகை­யிலும் தேர்தல் தொடர்­பான உப­தே­சங்­களை வழங்­கு­வ­தற்கும் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் பிர­தான  வழி­ந­டத்தல் காரி­யா­லயம் இன்று (நேற்று) திறந்து வைக்­கப்­பட்­டது. அத்­துடன் தேர்தல் தொடர்­பான அனைத்து நட­வ­டிக்­கை­களும் தலை­மை­ய­கத்தில் இருந்தே மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

 ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யாக  செயற்­படும் பங்­கா­ளிக்­கட்­சிகள் அனைத்தும் இந்த தேர்­தலில் எம்­முடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்­றன. குறிப்­பாக தினேஷ் குண­வர்த்­த­னவின் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியில் இருந்து எப்­போதும் இரண்­டுபேர் மாத்­தி­ரமே பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வா­கின்­றனர். அவர்­களில் தினேஷ் குண­வர்த்­த­னவைத் தவிர ஏனைய அனை­வரும் எம்­முடன் இணைந்­துள்­ளனர். அதே­போன்று விமல் வீர­வன்­சவின் கட்சி உறுப்­பி­னர்கள் அனை­வரும் எங்­க­ளுடன் இருக்­கின்­றனர். அவர் மாத்­தி­ரமே எதி­ர­ணியில் இருக்­கின்றார்.

அத்­துடன் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் முற்­றாக எங்­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­டு­கின்­றது. நுவ­ரெ­லி­யாவில் ஒரு பிர­தேச சபையில் மாத்­திரம் அவர்­களின் சேவல் சின்­னத்தில் எங்­க­ளது உறுப்­பி­னர்கள் இணைந்து போட்டியிடுகின்றனர். அதேபோன்று முஸ்லிம் கட்சிகளான அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களின் கட்சிகள் எங்களுடனே இருக்கின்றன. அதனால் எதிர்வரும் தேர்தலில் அதிகமான உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றி ஆட்சியமைப்பது உறுதியாகும் என்றார்.

2 comments:

  1. உறுதியோ உறுதி சிறீலங்கா சுதந்திர கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது. மற்ற அத்தனை கட்சிகளும் படுதோல்வி.

    ReplyDelete
  2. என்ன செய்வது அவரது கட்சியின் உறுப்பினர் என விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இவர் இருக்கிறார்... ஹிஸ்புள்ளா அவரது கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் என்பது அவருக்கு தெரியவில்லை... அமைப்பாளருக்கு தெரியப்படுத்தவும்

    ReplyDelete

Powered by Blogger.