Header Ads



எனது பதவி போனாலும் பரவாயில்லை, எண்ணெய் மாபியாவை ஒழிக்காமல் விடமாட்டேன்

எனது பதவி பரிபோனாலும் எனக்கு கவலையில்லை, நான் எண்ணெய் மாபியாவை ஒழிக்கத் தயாராக உள்ளேன் என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் உள்ள விமானங்களுக்கான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட சென்ற வேலையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த சில தினங்களாக பல எரிபொருள் விநியோக நிலையங்கள் சீல் வைக்கப்பட்டு முடிப்பட்டுள்ளன. இங்கும் அங்கும் மாறி மாறி தாவும் அமைச்சர்கள் மூடிப்பட்ட எரிபொருள் நிலையங்களை திறக்கமாட்டீர்களா என்று என்னிடம் கேட்டனர். ஆனால் எனக்கு எந்த அலுத்தங்கள் வந்தாலும் நான் எரிபொருள் மாபியாவை ஒழித்தே தீருவேன், குறிப்பாக டீசலில் மண்ணெண்னை கலப்பதை நிறுத்தியே தீருவேன்.'

தொடர்ந்து கூறுகையில், 

நான் அச்சப்படாமல் தரமற்ற எண்ணைக் கப்பலை நாட்டுக்குள் வரவிடாமல் திருப்பியனுப்பினேன். நான் தவறான செயலை நிறுத்த ஒருபோதும் அச்சப்பட்டதில்லை.  மக்கள் எமக்கு வாக்களித்தமைக்கு காரணம் தவறுகளை நிறுத்துவதற்கே ஆகும். 

கட்சிக்கு கட்சி தாவும் அமைச்சர்கள் பலர் கவலையடைந்துள்ளனர். காரணம் பல எரிபொருள் நிலையங்கள் சீல்வைக்கப்பட்டு உரிமைபத்திரம் பறிமுதல் செய்யப்பட்டமையே ஆகும். நான் பொறுப்புடன் சொல்கின்றேன் கட்சி கட்சி தாவும் அமைச்சர்கள் என்ன சொன்னாலும் சரி நான் இந்த எண்ணெய் மாவியாவை நிறுத்துவேன். 

எனக்கு இதுதொடர்பாக ஜனாதிபதியோ பிரதமரோ ஒருபோதும் அலுத்தம் கொடுத்ததில்லை குறிப்பாக மூடிய எரிபொருள் நிலையங்களை திறக்கச் செல்லியோ அல்லது சீல் வைக்கப்பட்ட பவுசர்களை விடுவிக்கவோ.
நான் விளையாடும் காலத்தில் தான் எல்மட் மாட்டினேன். ஆனால் நான் அரசியலுக்கு வந்த பின் எல்மட் மாட்டுவதில்லை. நான் ஒருபோதும் கவலைப்படுவதில்லை கட்சிக்கு கட்சி தாவும் அமைச்சர்களின் விமர்சனங்களை என்னி. 

இனிவரும் காலங்களில் எல்லா எரிபொருள் நிலையங்களிலும் ஊஊவு கமரா பொறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு எல்லா எண்ணை பவுசர்களிலும் புPளு பொறுத்தப்படும்.  நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் மக்களுக்கு மானியமாக வழங்கப்படும் மண்ணெண்னையை சில கள்ள வியாபாரிகள் கொள்ளையடிப்பதற்கு. 

நாங்கள் 30 ரூபா நட்டத்தில்தான் மண்ணெண்னையை பொதுமக்களளுக்கு மானியமாக விநியோகிக்கின்றோம்.  ஆனால் சில கள்ள வியாபாரிகள் இதில் இருந்து இலாபத்தை ஈட்ட மண்ணெண்னையை டீசலில் கலந்து பஸ்வண்டிகளுக்கும், கொள்களன் வண்டிகளுக்கும் உபயோகின்கின்றனர். 
அன்மையில் கம்பஹா நகரத்தில் இரண்டு டக்டர் வண்டிகளை சீல்வைத்தோம். என்னால் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

எனக்கு ஜனாதிபதியோ பிரதமரோ ஒருபோதும் சென்னதில்லை எரிபொருள் நிலையங்களை மூடவேண்டாம் என்று' என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.