Header Ads



பெட் ஸ்கேன் மூலம், விரைவில் பயனடையலாம் - MSH. மொஹமட்

கதீஜா பவுண்டேசனின் ஏற்பாட்டின் கீழ் பொது மக்களிடமிருந்தும், சமூக இயக்கங்கள் மற்றும் நன்கொடையாளர்களிட மிருந்தும் பெற்றுக்கொள் ளப்பட்ட நிதியுதவியின் கீழ் இலங்கை புற்றுநோய் வைத்தியசாலைக்கென கொண்டுவரப்பட்டுள்ள பெட் ஸ்கேன் இயந்திரத்தின் சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வழங்கப்படவுள்ளது.

குறிப்பிட்ட சீமேன்ஸ்' வர்த்தக நாமம் கொண்ட ஜேர்மன் நாட்டின் பெட் ஸ்கேன் இயந்திரம் 202 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட் டுள்ளது.

இவ்வியந்திரம் ஏற்கனவே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு விட்டது.

தற்போது தனியார் மருத்துவ நிலையமொன்றிலிருந்து புற்றுநோயாளர்கள் பெற்றுக்கொள்ளும் புற்றுநோயினை அறிவதற்கான ஸ்கேன் பிரதி ஒன்றரை  இலட்சம் ரூபா பெறுமதியானதாகும்.

 நோயாளர்கள் இந்தத் தொகையைச் செலுத்தியே ஸ்கேன் பிரதியை பெற் றுக்கொள்ள வேண்டியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து நோயா ளர்கள் அரச புற்று நோய் வைத்தியசாலையிலிருந்து இந்த ஸ்கேன் பிரதியை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

பெட் ஸ்கேன் இயந்திரத்தின் செயற்பாடுகளுக்காக சுமார் நான்கு கோடி ரூபா செலவில் வைத்தியசாலைக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் நிர்மானப் பணிகள் நிறைவடையவுள்ளன.

பெட் ஸ்கேன் இயந்திரத்தின் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கதீஜா பவுண்டேசனின் தலைவர் எம்.எஸ்.எச். மொஹமட் தெரிவித்தார்.


2 comments:

Powered by Blogger.