Header Ads



பெரோசா Mp ஆக வருவதை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் தடுத்ததா..?

(அஷ்ரப் ஏ சமத்)


ரோசி சேனாநாயக்க நேற்று (23) திகதி பி.பகல் பெரோசா முசம்மிலின் கொள்ளுப்பிட்டி இல்லத்தில் ஆற்றிய உரையின் உண்மைத் தன்மை என்ன ?கொழும்பு பெரிய பள்ளிவாசல் அவ்வாறானதொறு முடிவை எடுத்ததா ?அவரது உரையின்போது - 

கொழும்பில் கடந்த பாராளுமன்றத் தோ்தலின்போது ஜ.தே.கட்சியில் பெரோசாவும் போட்டியிட்டாா். ஆனால் முஸ்லீம்களது வாக்குகள் பேரொசா முசம்மிலுக்கு கணிசமாக கிடைக்கவில்லை.கிடைத்திருந்தால் அவரும் இன்று பா.உறுப்பிணாயிருப்பாா். அதற்கு காரணம் கொழும்பில் பெரிய பள்ளிவாசலில் தீா்மாணம் ஒன்றை எடுத்திருந்தனா். அதாவது பெரோசாவுக்கு எம்பி யாக வருவதற்கு வாக்களிக்க வேண்டாம் முஸ்லீம் பெண்கள் அரசியல் வருவது நல்லதல்ல எனத் தீர்மாணம் எடுத்தாதலேயே அவா் எம்.பி யாக வரமுடியவில்லை. கொழும்பில் வாழும்முஸ்லீம்கள் பெரோசாவுக்கு விருப்பு வாக்குகள் அளிக்கவில்லையெனத் தெரிவித்தாா்
பேரோசா முசம்மில் - ரோசி சேனாநாயக்காவினை கொழும்பில் மேயா் பதவிக்காக ஆதரித்து நடாத்திய காந்தா சவிய மகளிா் அமைப்பின் கூட்டத்தின்போதே ரோசி மேற்கண்டவாறு தெரிவித்தாா்.  

தொடா்ந்து உரையாற்றிய ரோசி சேனாநாயக்க-

கொழும்பு உன்னதமான டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட மாநகர சபையாக மேம்படுத்தப்படும்,  கொழும்பு மநாகரத்தில் 50 ஆயிர்ம் வீடுகள் மத்திய தரத்தினருக்காக நிர்மாணிக்கப்படும். அத்துடன் குறைந்த வட்டியில் தேசிய வீடமைப்பு வங்கி ஊடகாக கடன் வழங்கப்படும் இத்திட்டத்திற்காக 75 மில்லியன் ருபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஆசியாவின் ஒரு சிறந்த வா்த்தக பொருளாதார நிலையமாக கொழும்பு அபிவிருத்தி பெரும் கொழும்பு செழிப்புமிக்க மற்றும் பசுமை நகரம்  ஆகும்.  சமுக பொருளாதார  நடைமுறைக்கு  பொருந்தும்  வகையில்  மா நகர மக்களின் இயற்கை கழிவு சுகாதாரம் உள்ளிட்ட சமுக கேந்திர  சேவைகளை நோக்கமாகக் கொண்டு  நிலைபேறா  அபிவிருத்தியை முன்னெடுப்பதே   கொழும்பு மா நகயர சபையின் மேயராக போட்டியிடுவதாக ரோசி சேனநாயக்க தெரவித்தாா்.

6 இலட்சத்து 50 ஆயிரம் மேற்பட்ட மக்கள் வாழும் உங்கள் கொழும்பு நகரில்  நீர் விநியோகம்,  மற்றும் இயற்கை கழிவு  கட்டமைப்பு 800 வருடங்களுக்கு மேல்  பழமை வாய்ந்ததாகும்.  பிராந்தியத்தில்  ஏனைய எடுத்துக்காட்டு பசுமை நகரங்களுக்கு  அமைவாக கொழும்பு  இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.  அபயாகர டெங்கு  மற்றும் கழிவுப் பொருட்கள் போன்ற பொதுவான விடயங்களினால் மக்கள்  வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்த கொழும்பை  நாம் இன்று  மறந்துவிடவில்லை. இந்த விடயங்கள் எமது மனதை விட்டு இன்னும் நீங்கவில்லை.

1 comment:

  1. பெரிய பள்ளிவாசலில் சொல்லப்பட்டதோ  இல்லையோ, ஆனால், முஸ்லிம்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்:

    முறையாக மறைக்கப்படாத பெண்களை விட்டும் உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதையும்,

    ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்க வேண்டும் என்பதையும்.

    வாக்குகள் எல்லாம் இவற்றுக்கு  அப்பால்தான்! 

    ReplyDelete

Powered by Blogger.