Header Ads



இந்திய தாயால் கைவிடப்பட்ட குழந்தை, சுவிஸ் Mp ஆனார்


47 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவுடனேயே இந்தியாவில் பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது ஸ்விஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். டெல்லியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவழி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஸ்விஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நிகோலஸ் சாமுவேல் கக்கர் (Niklaus-Samuel Gugger ) தனது கதையை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1970-ஆம் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள சி.எஸ்.ஐ. லம்பார்டு நினைவு மருத்துவமனையில் பிறந்த தன்னை வளர்க்க வசதியின்றி தனது தாய் அனுசுயா மருத்துவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

தன்னை தத்தெடுத்த பெற்றோரான ஃபிரிஸ் – எலிசபெத் ((Fritz – Elizbeth)) உடன் தனது 4 வயது வரை கேரள மாநிலம் தலச்சேரியில் வசித்ததாகவும் பின்னர் ஸ்விட்சர்லாந்து வந்ததாகவும் தெரிவித்த நிகோலஸ், படிக்கவைக்க பெற்றோருக்கு வசதியில்லாததால் தோட்ட வேலை செய்ததாகவும் பின்னர் அரசியலில் நுழைந்து படிப்படியாக முன்னேறி நாடாளுமன்ற உறுப்பினராகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தனது இந்திய தாய் அனுசுயா இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஸ்விஸ் பாராளுமன்ற உறுப்பினர்

பிறந்தவுடனேயே பெற்றோரால் கைவிடப்பட்ட இந்தியர் ஒருவர் ஸ்விட்ஸர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நிக்கலஸ் சாமுவேல் கூகர் (48) டெல்லியில் பிறந்தவர். அவரைப் பராமரிக்க வசதியற்ற அவரது பெற்றோர், நிக்கலஸ் பிறந்த சில மணி நேரங்களிலேயே மருத்துவர் ஒருவரிடம் அவரை ஒப்படைத்துச் சென்றுவிட்டனர்.

நிக்கலஸ் பிறந்த பதினைந்தாவது நாள் ஸ்விட்ஸர்லாந்து தம்பதியர் அவரைத் தத்தெடுத்துக்கொண்டனர். எனினும் அவர்களும் பொருளாதாரச் சிரமங்கள் மிகுந்த குடும்பத்தினரே!

நான்கு வருடங்கள் கேரளாவில் வசித்த அவர்கள், தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். அங்கு சாரதியாகவும் தோட்ட வேலைகளைச் செய்தும் தனது உயர் கல்வியைப் பெற்றுக்கொண்டார் நிக்கலஸ்.

சமூகத் தொண்டில் ஈடுபாடு கொண்ட நிக்கலஸுக்கு இன விகிதாசாரப்படி பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது.

ஸ்விட்ஸர்லாந்து அரசியலில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள் யாரும் இதுவரை இல்லை என்பதால், அடுத்த பத்து வருடங்களுக்கு நிக்கலஸ் பதவி வகிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.