Header Ads



ஜனாதிபதி பதவி விலக வேண்டும் - JVP


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது பதிவியில் இருந்து விலக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டு காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்தால் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஜனாதிபதி அமைச்சரவையை பிரதிநிதித்துவம் செய்ததுடன் அமைச்சரவையை நியமித்திருந்தார், அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்குத் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றார்கள், பிரபல்யம் அடைவதற்காக தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி எதனைப் பேசினாலும் நாட்டின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பொறுப்பு உண்டு என்பதை மறுக்க முடியாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Nono.... How he will resign...my dear
    He is from SLFP... and he is the President
    He has more work to find out the Sugar in Milo...Sugar in Sugarcane....
    Soult in Bread....Milk in chocolate.... Hihihi Jockers!!!

    ReplyDelete

Powered by Blogger.